Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தள்ளிப்போனது 'விவேகம்' படத்தின் ரிலீஸ்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் 'விவேகம்'. அஜித்தின் 57-வது படமான இந்தப் படத்துக்காக சிவாவுடன் மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்தார் அஜித். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்,  டீசர் மற்றும் படம் பற்றிய அனைத்து புகைப்படங்களும் ஹிட் அடித்த நிலையில், 'விவேகம்' படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடும் முயற்சியில் படக்குழு இருந்தது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவந்தது. இதற்கிடையில், தற்போது 'விவேகம்' படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

vivegam


சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்  தயாரித்துள்ள இந்தப் படத்தில்  காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் மூன்று சிங்கிள் ட்ராக் இதுவரை வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் 'விவேகம்' படத்தின் 97 சதவிகிதம் படப்பிடிப்பை மைனஸ் டிகிரியில் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.  

vivegam


அஜித்தை இன்டர்நேஷனல் ஹீரோவாக காட்டும் 'விவேகம்' படத்துக்கு சென்சார் போர்ட் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. சிவா, அஜித் கூட்டணியில் ஹாட்ரிக் வெற்றி அடிக்கும் 'விவேகம்' படத்தை அஜித் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க... ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த 'விவேகம்' படத்தின் ரிலீஸ் தற்போது ஆகஸ்ட் 24-ம் தேதிக்குத் தள்ளிப்போயுள்ளது. இதுபற்றிய அறிவிப்பை இயக்குநர் சிவா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close