'விக்ரம் வேதா' பார்ட் 2 எப்போது! - இயக்குநர் புஷ்கர்

'ஓரம் போ', 'வ குவாட்டர் கட்டிங்' படங்களுக்குப் பிறகு, இயக்குநர் புஷ்கர் காயத்ரி இயக்கியிருக்கும் திரைப்படம் ' விக்ரம் வேதா'. விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் ஹிட் அடித்து பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுத்திருக்கும் இந்தப் படம் விமர்சனம் ரீதியாக பாஸிட்டிவான அதிர்வை படத்துக்கும், படத்தில் நடித்தவர்களுக்கும் கொடுத்துள்ளது. ஜி.எஸ்.டி பிரச்னைக்குப் பிறகு, 'விக்ரம் வேதா' திரைப்படம் வெளியாகி பல தமிழ் சினிமா ரசிகர்களை தியேட்டரில் படம் பார்க்க வைத்திருக்கிறது.

vikram vedha

இந்தப் படத்தின் வெற்றியால், 'விக்ரம் வேதா' இந்தியில் எடுக்க வேண்டும் என்று மாதவன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும், மலையாளத்திலும் வெளியான இந்தப் படம் அங்கு ஹிட் அடித்ததால், விஜய்சேதுபதியின் நேரடி மலையாளப் படம் எப்போது என கேரளா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில், 'விக்ரம் வேதா' திரைப்படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்ய நடிகர் ராணா முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.  இந்நிலையில் 'விக்ரம் வேதா' படம் பார்ட் 2 வருமா என்று தெரிந்துகொள்ள  இயக்குநர் புஷ்கரைத் தொடர்புகொண்டோம்.

"'விக்ரம் வேதா' படத்தின் ஸ்க்ரிப்ட் பண்ணும்போதே, பார்ட் 2 எடுக்கும் ஐடியா இருந்தது. ஆனால், அதற்கான எந்த ஸ்க்ரிப்ட்டும் எங்களிடம் இல்லை. அடுத்து என்ன பண்ணப் போறோம் எந்த மாதிரியான ஸ்க்ரிப்ட் என்று  நானும் காயத்ரியும் பேசவில்லை. இனிமேல்தான் அதுபற்றிய முடிவுகளை எடுக்க வேண்டும். 'விக்ரம் வேதா'  திரைப்படம் இரண்டு கதாபாத்திரத்தை பேஸ் பண்ணியது. அதனால், பார்ட் 2 எடுக்கலாம் என்று முதல் ஸ்க்ரிப்ட் பண்ணும்போதே அதுபற்றி யோசித்தோம். ஆனால், இப்போது பார்ட் 2  சாத்தியமா என்பது தெரியவில்லை'' என்றார் புஷ்கர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!