ஓவியாவை பிக் பாஸில் சேர்க்கச் சொன்னது இவர்தானாம்! | This is the person who recommended Oviya for Bigg Boss show

வெளியிடப்பட்ட நேரம்: 21:12 (01/08/2017)

கடைசி தொடர்பு:21:12 (01/08/2017)

ஓவியாவை பிக் பாஸில் சேர்க்கச் சொன்னது இவர்தானாம்!

'பிக் பாஸ்' வீட்டில் இருக்கும் ஓவியாவுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம். எத்தனை முறை எவிக்‌ஷனில் ஓவியா பெயர் இருந்தாலும், ஓவியாவுக்கே எங்கள் ஆதரவு என பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். 

oviya


பார்வையாளர்களைக் கவர 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் இயக்குநர்கள் பல்வேறு சுவாரஸ்யங்களை நிகழ்ச்சியில் சேர்த்து வருகின்றனர். இதுவரை 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஆறு பிரபலங்கள் வெளியேறியிருக்கும் நிலையில் மீதமிருக்கும் ஒன்பது பிரபலங்கள் 'பிக் பாஸ்' வீட்டுக்குள் இருந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத வகையில் பத்தாவது போட்டியாளராக 'பிக் பாஸ்' வீட்டுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார், நடிகை பிந்து மாதவி. 'பிக் பாஸ்' வீட்டில் பிந்து மாதவியின் செயல் எப்படி இருக்கும், அவர் இந்த வீட்டுக்குள் தாக்குப் பிடிப்பாரா என்பதையெல்லாம் வரும் வாரங்களில் காணப்போகிறோம். ஓவியாவுக்கும் பிந்து மாதவிக்கும்தான் போட்டி அதிகமாக இருக்கும் என ரசிகர்களும் நினைக்கிறார்கள். பிந்து மாதவியின் கேரக்டரும் ஓவியாவின் கேரக்டரும் ஒண்ணுதானா என இரண்டு பேருடணும் நடித்திருக்கும் நடிகர் கிருஷ்ணாவிடம் கேட்டோம். 

''பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நானும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்ப்பேன். ஓவியா தனது இயல்பான கேரக்டருடன்தான் 'பிக் பாஸ்' வீட்டில் இருக்கிறார். பிந்து மாதவியும் ஓவியா மாதிரிதான் ஜாலியான கேரக்டர். அவரும் ஓவியா போல் ஜாலியாக 'பிக் பாஸ்' வீட்டில் இருப்பார் என்று நினைக்கிறேன்'' என்றவரிடம், உங்கள் ஓட்டு ஓவியாக்கா இல்லை பிந்துமாதவிக்கா என்றால், "என்னுடைய ஓட்டு யாருக்கும் இல்லை. அதுமட்டுமில்லாம, எனக்கு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஓட்டுப் போடும் வழிமுறையெல்லாம் தெரியாது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் ஓவியாவை சேர்த்துக்கொள்ளச் சொன்னது நான்தான். விஜய் டி.வி-யிலிருந்து என்னிடம் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காக யாரவது இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அப்போது எனக்கு ஒவியாதான் நினைவுக்கு வந்தார். உடனே, ஓவியா பெயரைச் சொன்னேன்''  என்று கலகலப்பாக சொன்ன கிருஷ்ணாவிடம் தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் படங்களைப் பற்றியும் கேட்டோம். 

கிருஷ்ணா


’’பண்டிகை படம் எனக்கு சினிமாவில் புதிய அடையாளத்தைக் கொடுத்துள்ளது. ஆக்‌ஷன் ஹீரோவாக மக்கள் என்னைப் பார்க்க ஆரம்பித்திருக்கும் நேரத்தில் 'களரி' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். கொச்சின் பகுதியில் வாழும் தமிழர்கள் பற்றிய கதைதான் இது. இந்தப் படத்தின் நூறு சதவிகிதம் படப்பிடிப்பு கேரளாவில்தான் நடக்கிறது. அண்ணன், தங்கை சென்டிமென்ட் படத்தில் பெரிதாகப் பேசப்படும். தங்கை கதாபாத்திரத்தில் படத்தில் ஒரு புது நடிகை நடிக்கிறார். இதுதவிர, ராஜாராமன் இயக்கத்தில் 'வீரா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் இந்தப் படத்தை திரையில் எதிர்பார்க்கலாம். இந்தப் படம் வட சென்னை சம்பந்தப்பட்ட கதை. காமெடி கதைக்களமாக இருக்கும் இந்தப் படத்தில் ஒரு நற்பணி மன்றத்தின் தலைவராக நான் எடுக்கும் முயற்சிகள்தான் படத்தின் கதை. 'கழுகு' படம் வெற்றியடைய என்ன காரணங்கள் இருந்ததோ, எந்த விஷயங்கள் எல்லாம் ரசிகர்களுக்குப் பிடித்திருந்ததோ அதையெல்லாம் தேடிப்பிடித்து எனது படங்களில் ஃபாலோ செய்கிறேன்’’ என்று மூச்சு விடமால் பேசி முடித்தார் கிருஷ்ணா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க