சிம்பு படத்துக்காக உருவாகும் புதிய அணி..!

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தால் பயங்கர அப்செட்டில் இருந்த சிம்பு, ‘இனிமேல் தாங்க முடியாது குருநாதா..!’ என்கிற மோடில் தனது அடுத்த படத்தைத் தானே இயக்கத் தயாராகிவிட்டார். சிம்புவின் அடுத்த படம் என்ன என்று இணையமே பதறிக்கொண்டிருந்த வேளையில், ’என்னுடைய புதிய படங்களைப் பற்றி பேசுவதை நிறுத்துங்கள்’ என்று ட்வீட் தட்டியிருந்தார்.

சிம்பு

அதன் பிறகு, சிம்பு தனது அடுத்த படமாக 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' படத்தை அறிவித்தார். சிம்பு இயக்கும் இந்தப் படத்தின் அப்டேட்களை அவ்வப்போது தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். இன்று, ’படத்தின் பின்னணி இசைக்கான வேலைகளை யுவன் சங்கர் ராஜா தொடங்கிவிட்டார். முதல் முறையாகப் பின்னணி இசையை முடித்துவிட்டு படப்பிடிப்புக்குச் செல்கிறேன்’ என சிம்பு ட்வீட் செய்திருந்தார். தற்போது இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனும் எடிட்டராக ஆண்டனியும் ஒப்பந்தமாகி  உள்ளதாக ட்வீட் செய்துள்ளார். தொடர்ந்து தனது படங்கள் தோல்வியைத் தழுவி வருவதால், சிம்புவே களத்தில் இறங்கி தனக்கான டீமை ஃபார்ம் செய்துகொண்டிருக்கிறார். தன் மீதுள்ள தவறான விமர்சனங்களை துடைக்கவும், தனக்கான வெற்றியைத் தேடிக்கொள்ளவும் சிம்பு தீவிரமாக இருப்பது அவரின் செயல்பாடுகளில் இருந்து நமக்கு தெரியவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!