ஆரவ் நடித்திருக்கும் 'மீண்டும் வா அருகில் வா' படத்தின் டீசர்..! | Meendum Vaa Arugil Vaa movie teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (03/08/2017)

கடைசி தொடர்பு:11:23 (03/08/2017)

ஆரவ் நடித்திருக்கும் 'மீண்டும் வா அருகில் வா' படத்தின் டீசர்..!

மீண்டும் வா அருகில் வா

1991-ம் ஆண்டு வெளிவந்த படு பயங்கரமான ஹாரர் திரைப்படம், 'வா அருகில் வா'. 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தில் நடித்த சந்தோஷும், பிக் பாஸ் போட்டியாளர் ஆரவ்வும் இணைந்து, தற்போது 'மீண்டும் வா அருகில் வா' என்கிற பெயரில் ஹாரர் படம் ஒன்றில் நடித்துள்ளனர். 

ஜெய ராஜேந்திர சோழன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு, விவேக் மற்றும் ஜெஷ்வந்த் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். பிரபு  ஒளிப்பதிவு செய்துள்ளார். பிக் பாஸ் போட்டியாளரான ஆரவ், 'சைத்தான்' படத்திலேயே ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். இந்தப் படம்தான் அவர் ஹீரோவாக நடித்து வெளிவரப்போகும் முதல் திரைப்படம். இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளிவந்துள்ளது.