வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (03/08/2017)

கடைசி தொடர்பு:11:15 (03/08/2017)

'நாச்சியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டில்..!

நாச்சியார்

'தாரை தப்பட்டை' படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்கும் திரைப்படம், 'நாச்சியார்'. இந்தப் படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் அறிவிப்போடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகி, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல் பதிவின் போதுதான், இயக்குநர் பாலாவின் பிறந்தநாள் வந்தது. அப்போது, தனது இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாலாவுக்கு இசையால் வாழ்த்துச் சொன்னார், இளையராஜா. அந்த வீடியோ அப்போது வைரலானது. 'நாச்சியார்' படத்துக்கு, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவுசெய்கிறார். படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.