Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவாஜிக்கு புதிதாக ஒரு சிலை செய்வோம்..! கமல்ஹாசனின் அடுத்த ட்விட்

'சிவாஜிக்கு புதிதாக ஒரு சிலை செய்வோம். அதனை எந்நாளும் காப்போம்' என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

kamal hassan

 


கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை வைக்க முடிவு எடுக்கப்பட்டது. அந்தச் சிலை சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டது. சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் சிவாஜி சிலையை அகற்ற உத்தரவிட்டது. இதனையடுத்து சிவாஜி சிலையை அகற்றுவதாக தமிழக அரசு உறுதியளித்தது.

இந்த நிலையில் நேற்று இரவு, சிவாஜி சிலை காமராஜர் சாலையிலிருந்து அகற்றப்பட்டது. சிவாஜி சிலை அகற்றப்பட்டதில் தமிழக அரசின் சதி இருப்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 'சிவாஜி கணேசன், ரசிகர் மனதிலும், நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலை செய்வோம் அதைக் எந்த நாளும் காப்போம் அரசுக்கும் அப்பால்  என் அப்பா' என்று பதிவிட்டுள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close