வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (05/08/2017)

கடைசி தொடர்பு:21:10 (05/08/2017)

'குரங்கு பொம்மை' படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது!

அறிமுக இயக்குநர் நித்திலன் எடுத்திருக்கும் திரைப்படம் 'குரங்கு பொம்மை'. விதார்த், பாரதிராஜா நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மம்மூட்டி வெளியிட்டார். மேலும், அனிமேடட் போஸ்டரை விஜய் சேதுபதியும், டீஸரை ஆர்யாவும், ட்ரெய்லரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் வெளியிட்டனர்.  

kurangu pommai


இந்தப் படத்தில் கஞ்சா கருப்பு, பாலா சிங், இளங்கோ குமாரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்துக்குப் பிறகு விதார்த் நடிப்பில் ரிலீஸூக்காக காத்திருக்கும் படம் இது.  


படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அஜநீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை  ‘ஸ்ரேயாஸ்ரீ மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. இந்தத் தகவலை படத்தின் இயக்குநர் நித்திலன்  தனது ஃபேஸ்புக் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.  போதிய திரையரங்குகள் கிடைக்காததால்தான் படத்தின் ரிலீஸ் தள்ளிபோயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க