Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெங்கைய நாயுடுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து..!

துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கைய நாயுடுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

rajinikanth


துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. அதில் பா.ஜ.க சார்பில் வெங்கைய நாயுடுவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு முடிந்து மாலையிலேயே வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவும் அறிவிக்கப்பட்டது. அதில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வெங்கைய நாயுடு 516 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக வெங்கைய நாயுடு பதவியேற்க உள்ளார்.

அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், கோபாலகிருஷ்ண காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், 'மதிப்பிற்குரிய வெங்கைய நாயுடுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மதிப்பிற்குரிய பதவிக்கு நீங்கள் தகுதியானவர்' என்று பதிவிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement