வெளியிடப்பட்ட நேரம்: 00:48 (07/08/2017)

கடைசி தொடர்பு:10:34 (07/08/2017)

'ஆறு வருடங்களாகப் பழிவாங்கப்பட்டேன்..!' உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

'அரசியல் பின்புலம்கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், ஆறு வருடங்களாகப் பழிவாங்கப்பட்டேன்' என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'பொதுவாக எம்மனசு தங்கம்' இம்மாதம் 11-ம் தேதி வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் ப்ரோமஷனுக்காக உதயநிதிஸ்டாலின், பார்த்திபன், நிவேதா பெத்துராஜ், சூரி, இயக்குநர் தளபதி முருகன்  ஆகியோர் சேலம் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், 'கமல்ஹாசனின் ஊழல்குறித்த கருத்துகளை வரவேற்கிறேன். நான் அரசியல் பின்புலம்கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், கடந்த ஆறு வருடங்கள் பழிவாங்கப்பட்டேன். ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் அனைத்து படங்களுக்கும் வரி விலக்கு மறுக்கப்பட்டது. அதனால், ஒவ்வொரு படத்துக்கும் நீதிமன்றத்துக்குச் சென்று வரி விலக்கு பெற்றேன்' என்றார்.