விவேகம் படத்தின் பாடல்கள் வெளியாகின ..!

விவேகம்

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித், சிவா கூட்டணியில் மூன்றாவதாக உருவாகிவரும் திரைப்படம் விவேகம். ஆகஸ்ட் 24ம் தேதி ரிலீஸாகவுள்ள விவேகம் படத்தின் பாடல்கள் இன்று வெளியாகிவுள்ளன.

விவேகம் படத்தின் பாடல்களைக் கேட்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...

ஏற்கெனவே இந்தப் படத்தின் சர்வைவா, தலை விடுதலை, காதலாட போன்ற பாடல்கள் வெளியாகியிருந்தாலும் படத்தின் ஆல்பத்தை கேட்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். வேதாளம் படத்தின் பாடல்கள் தெறி ஹிட் அடித்ததால், விவேகம் படத்திற்கும் அனிருத்தையே டிக் அடித்தார் அஜித். இந்தப் படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். Saavn இணையதளத்தில் விவேகம் படத்தின் ஆல்பம் வெளியாகிவுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!