வெளியிடப்பட்ட நேரம்: 08:31 (08/08/2017)

கடைசி தொடர்பு:08:31 (08/08/2017)

நாளை வெளியாகிறது 'ஸ்பைடர்' படத்தின் டீசர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிவரும்  படம், 'ஸ்பைடர்.' முருகதாஸ் சிறு இடைவெளிக்குப் பின் தமிழில் இயக்கும் படம் என்பதால், இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. 

spider


இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. ஏற்கெனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும் நிலையில், நாளை டீசர் வெளியாகிறது. இந்தப் படத்தின்மூலம் மகேஷ் பாபு நேரடியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் இசை, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. 
இந்தப் படத்துக்குப் பிறகு, நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க வாய்ப்புள்ளதாக முருகதாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.