Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”அமேசான் முதல் டைட்டன் வரை மாடல்...இனி சினிமா!” - மாடல் திவ்யபாரதி

திவ்யபாரதி

மாடலிங் துறையில் நுழைந்த சில மாதங்களிலேயே தனி முத்திரை பதித்தவர் திவ்யபாரதி. போத்தீஸ், அமேசான், சென்னை சில்க்ஸ், டைட்டன் போன்ற முன்னணி நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடித்திருப்பவர். அவரோடு ஒரு கலகல சாட்!

"உங்களைப் பற்றி?"

என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். படிச்சது பி.டெக் (IT). செல்ல அம்மா, அன்பான அப்பா, குறும்புக்காரத் தம்பி.. அப்பா துபாயில ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்க்குறாங்க. தம்பி இஞ்சினியரிங் படிச்சிட்டு இருக்கான்."

திவ்யபாரதி"பி.டெக் பொண்ணு மாடலிங் துறைக்குள்ள நுழைஞ்சது எப்படி?"

"காலேஜ் படிக்கிறப்ப நான் ரொம்ப அமைதியான, அடக்கமான பொண்ணு. ஆண்களைப் பார்த்தா ரொம்பப் பயப்படுவேன். பசங்க குரூப்பா நின்னுட்டு இருந்தால், நான் வேற பக்கமா போய்டுவேன். அப்படித்தான் காலேஜ் லைஃப் இருந்துச்சு. (உண்மையத்தான் சொல்றேன் நம்புங்க) ஃபேஷன் டிசைனிங் படிக்கிறதுக்காகச் சென்னைக்கு வந்தேன். அந்த இன்ஸ்டிடியூட்ல ஒரு போட்டி நடந்தது. அதில் என்னை ரேம்ப் வாக் பண்ண சொனாங்க. ஆரம்பத்துல முடியாதுனு சொன்னேன். எல்லோரும் வற்புறுத்தினதால வேற வழி இல்லாம ஒத்துக்கிட்டேன். அந்த ரேம்ப் வாக்ல நான்தான் சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷன். அதனால கொஞ்சம் டென்ஷன் இருந்ததுச்சு. அதை வெளியே காட்டிக்காம ரொம்பவே கவனமா நடந்தேன். அந்த நிகழ்ச்சில என்னைப் பார்த்துட்டு அமேசான் விளம்பரப் படத்துல நடிக்கக் கூப்பிடாங்க. இப்படித்தான் என்னோட மாடலிங் பயணம் ஆரம்பிச்சது."

"உங்க மாடலிங் ஆசைக்கு வீட்டுல கடுமையான தடை போட்டாங்களாமே?"

"நான் மாடலிங் பண்றது எங்க அப்பாக்குச் சுத்தமாப் பிடிக்கல. அம்மாகிட்ட என்னைத் திட்டிட்டே இருப்பாங்க. ஒரு கட்டத்தில, 'நீ படிச்சதெல்லாம் போதும்; மாடலிங்கெல்லாம் ஒண்ணும் பண்ண வேண்டாம். ஒழுங்கா வீட்டுக்குக் கிளம்பி வா, இல்லைன்னா செலவுக்குப் பணம் அனுப்ப மாட்டோம்'னு ரொம்ப கறாராகச் சொல்லிட்டாங்க. என்ன செய்யறதுனு சின்னக் குழப்பம் எனக்கு. மாடலிங் பண்ணி வர்ற பணத்தை வெச்சி கொஞ்ச நாள் தனியா இருந்தேன். என்னோட விருப்பத்தை வீட்லேயேயும் புரிஞ்சிகிட்டாங்க. இப்ப எனக்கு வீட்ல ஃபுல் சப்போர்ட்"

"தொடர்ச்சியாக விருதுகள் கிடைத்ததாமே?"

"ஆமா. நான் அறிமுகமான அந்த வருஷத்திலேயே 'Ms.Ethnic Face of Madras 2015', 'Popular new face model of 2015 Chennai', 'Princess of Coimbatore' ஆகிய மூன்று விருதுகள் கிடைச்சது. விருதுகள் எப்போதுமே அடுத்தக் கட்டத்துக்கு உந்தித் தள்ளுபவைதானே! அந்த உத்வேகத்தை எனக்கும் கொடுத்திருக்கு!"

"சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவா இருக்கீங்களே?

திவ்யபாரதி"ஆமா... எனக்கு சோஷியல் மீடியா மூலமாகத்தான் நிறைய வாய்ப்புகள் கிடைச்சது. அதுனால நான் வொர்க் பண்ற எல்லா சூட்டிங் போட்டோஸையும் உடனே, சோஷியல் மீடியாவில் அப்லோட் பண்ணிடுவேன். அவங்க கொடுக்குற கமெண்ட்ஸ்தான் எனக்கு பூஸ்ட். ஃபேஸ் புக்ல ஏகப்பட்ட ரசிகர்கள் எனக்கு இருக்காங்க"

"அப்படினா லவ் புரொப்போஷல்ஸ் வந்திருக்குமே?"

"ரசிகன் என நிறையப் பேர் பேசியிருக்காங்க. ஆனா சத்தியமா இது வரைக்கும் என் கிட்ட யாருமே லவ் புரொப்போஸ் பண்ணது இல்ல. பார்ப்போம். இனிமே யாரச்சும் புரொப்போஸ் பண்ணா கண்டிப்பா சொல்றேன்."

"மாடலிங் செய்பவர்கள். ஃபுட் விஷயத்தில் டயட்ல இருப்பாங்களே.. நீங்க எப்படி?"

"நானா... டயட்லயா... எனக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கண்டிப்பா சாப்பிட்டே ஆகணும். சாப்பாடும் தூக்கமும் என்னோட இரு கண்கள்"

"வெள்ளித்திரையில நுழைஞ்சிட்டீங்க... சினிமா பயணம் எந்த அளவில் இருக்கு?"

"சினிமா தனி இடம் பிடிக்கணும்னு எண்ணம் இருக்கு. 2015-ல் மாடலிங் துறைக்குள்ள நுழைஞ்சேன். அந்த வருஷத்திலேயே சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு கிடைச்சது. முதல்ல "முப்பரிமாணம்" படத்துல, ஹீரோயினுடைய தோழியா நடிச்சேன். அதைப் பார்த்திட்டு நிறைய வாய்ப்புகள் வந்தது. சில பெர்சனல் காரணங்களால் அந்தப் படங்களில் நடிக்க முடியல. எனக்குப் பிடிச்ச கதைக்களமா இருந்தா நிச்சயம் நடிப்பேன்" 

"எதிர்காலத்தில் சினிமா... மாடலிங்கா?"

"மாடலிங் துறையில ஒரு நல்ல பேர் வாங்கிட்டேன். இதேபோல வெள்ளித்திரை, சின்னத்திரைனு எல்லாப் பக்கமும் மக்கள் கிட்ட நல்ல பேர் வாங்கனும். அதுதான் என் ஆசை. அதை நோக்கித்தான் என் பயணம்."

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement