Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:

• அழகு, ஸ்டைல், கம்பீரம், கட்டுமஸ்தான லுக், புயல் நடனம்... என அத்தனை திறமைகள் இருந்தாலும், பாலிவுட்டில் 'கான்’ நடிகர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் ஹ்ரித்திக் ரோஷனுக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் விடாமல் ஒவ்வொரு படத்திலும் புதுப்புது வெரைட்டி காட்டிக்கொண்டேயிருக்கிறார். கத்ரீனா கைஃபுடன் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் 'பேங் பேங்’ படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு. 'படம் முழுக்க பரபர ஆக்ஷன். இடையே சின்னச் சின்ன ரிலாக்ஸாக டான்ஸ் இருக்கும். மைக்கேல் ஜாக்ஸன் ஆல்பங்கள் கொடுக்கும் எனர்ஜியை, படத்தின் ஒவ்வொரு பாடலும் கொடுக்கும்!’ என்று நெளிந்து வளைகிறார் ஹ்ரித்திக். நீ கலக்கு ப்ரோ!

இன்பாக்ஸ்

•  கியூபாவின் இரும்பு மனிதர் ஃபிடல் காஸ்ட்ரோவின் புது நண்பன்... எட்டு வயது மார்லன் மென்டீஸ். சமீபத்தில் காஸ்ட்ரோவின் பிறந்த நாள் அன்று கியூபாவில் ஒரு  தொலைக்காட்சி

இன்பாக்ஸ்

நிகழ்ச்சியில் மார்லன், காஸ்ட்ரோ போலவே நடை, உடை, பாவனை என அசத்த, ஒரே நாளில் பிரபலமாகிவிட்டான். படுக்கையறை முழுக்க காஸ்ட்ரோவின் புகைப்படங்களாகத் தொங்கவிடும் அளவுக்கு, தீவிர காஸ்ட்ரோ வெறியன். மார்லனின் பிரியத்தை உணர்ந்த காஸ்ட்ரோ, அவனை அழைத்து தன் குடும்பத்தினருடன் விருந்து அளித்திருக்கிறார். '88 வயது போலவே இல்லை அவருக்கு. 'என் இனிய நண்பா மார்லன்’ என்று அவரது கையெழுத்திலேயே ஒரு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்’ என்று பூரிக்கிறான் மார்லன். சூப்பர் சுட்டி!  

•  டபுள் ஹீரோயின் படங்களில் நடிப்பதற்கு தயங்காமல், 'ஓ.கே டன்’ சொல்லும் நந்திதாவுக்கு இன்னொரு சென்ட்டிமென்ட்டும் உண்டு. 'உங்க கேரக்டர் பேர் மீரா’ என்று யாராவது சொன்னால், கதைகூட கேட்காமல் கால்ஷீட் கொடுத்துவிடுவாராம். அந்தளவுக்கு மீரா என்ற பெயர் மீது நந்திதாவுக்கு கிரேஸ். உதவி இயக்குநர்ஸ்... நோட் பண்ணிக்கங்கப்பா!

இன்பாக்ஸ்

•  'ஹாரிபாட்டர்’ சிறுவன் டேனியல் ராட்க்ளிஃப், இப்போ 'ஹிட்ஹாட்’ இளைஞன். காமிக்ஸ் பாய் தோற்றத்தில் இருந்து பிளேபாய் இமேஜுக்கு மாறுவதற்காக, 'நான் நடிகைகளுடன் மட்டுமே டேட்டிங் செல்ல விரும்புகிறேன். காரணம், அவர்களால்தான் ஷ§ட்டிங் மற்றும் கால்ஷீட் நெருக்கடிகளைப் புரிந்து என்னுடன் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும்’ என்று அதிரடி கிளப்பியிருக்கிறார். இதனால், 'பல ரசிகைகளை இழப்பாய்’ என்ற எச்சரிக்கையை பார்ட்டி கண்டுகொள்ளவே இல்லை. அந்த அளவுக்கு அட்வான்ஸ் புக்கிங்ல ஓடுதோ!

• 9,900 கி.மீ நீளும் ஷாங்காய்- சான் பிரான்சிஸ்கோ பயணத்தை, இரண்டே மணி நேரத்தில் கடக்கக்கூடிய அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை சீன விஞ்ஞானிகள் தயாரித்து வருகிறார்கள். பனிப்போர் சமயம் ரஷ்யா பயன்படுத்திய 'சூப்பர் கேவிடேஷன்’ எனும் நீர்க்குமிழ்களை உண்டாக்கி, கப்பலின் வேகத்தை அதிகரிக்கும் முறையைப் பயன்படுத்தி அந்தக் கப்பல் கட்டப்படுகிறதாம். குண்டு போடத்தானே அந்தக் கப்பல்?

•  'ஃபைண்டிங் ஃபேனி’ என்ற இந்தி படத்தில் ஹீரோயின் தீபிகா படுகோன், ஹீரோவிடம் சொல்லும் ஒரு வசனத்தை, 'மியூட்’ செய்ய சொல்லி அடம்பிடிக்கிறது சென்சார் போர்டு. 'மாட்டேன்... மாட்டவே மாட்டேன். இதற்கு முன் 'தில்சே’, '2 ஸ்டேட்ஸ்’ எனப் பல படங்களில் இடம்பெற்ற அந்த வசனத்தை, என் படத்தில் மட்டும் ஏன் நீக்கச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டு மல்லுக்கு நிற்கிறார் படத்தின் இயக்குநர் ஹோமி. படத்தில் இடம்பெறும் 'இதழ் பச்சக்’ காட்சிகளுக்கு எல்லாம் எந்த மறுப்பும் சொல்லவில்லையாம் சென்சார். அப்படி என்னதான் சொன்னாராம் தீபிகா? 'I am a virgin’. சரிதான்!

இன்பாக்ஸ்

•  சின்னச் சின்ன வெற்றி, அவமானகரமான தோல்வி, பயிற்சியாளர் சர்ச்சை... என இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தடுமாறிக்கொண்டிருக்க, மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஐ.சி.சி 'பேட்ஸ்வுமன்’ பட்டியலில் முதல் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி எட்டு வருடங்களுக்குப் பிறகு, டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தைத் தோற்கடித்தது. அதில் இரண்டாவது இன்னிங்ஸில் 50 ரன்கள் குவித்தார் மிதாலி. வெற்றியும் ரேங்கிங்கும் உற்சாகம் அளிக்க, 'நிறைய டெஸ்ட் போட்டிகள் விளையாட மகளிருக்கு வாய்ப்பு அளியுங்கள்!’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனா, 'டெஸ்ட் வேண்டாம்’னு அலர்றாங்களே பாய்ஸ்!

இன்பாக்ஸ்

•  ஹாலிவுட்டின் புதிய ஆக்ஷன் ஹீரோயின்... 24 வயது ஜெனிஃபர் லாரன்ஸ். ஏஞ்சலினாவுக்குப் பிறகு எந்த ஹீரோயினும் ஆக்ஷன் சாகசங்களில் அமளிதுமளி பண்ணியது இல்லை. ஆனால், 'தி ஹங்கர் கேம்ஸ்’ படத்தின் பாகங்களில் அசால்ட் அதிரடிகளைச் செய்தார் ஜெனிஃபர். சமீபத்தில்

இன்பாக்ஸ்

இவரின் 'எக்ஸ்மென்’ பட ஆக்ஷனை விமர்சகர்கள் உச்சி முகர்ந்து பாராட்டுகிறார்கள். வசூலிலும் படம் சாதனை உச்சத்துக்குச் செல்ல, ஜெனிஃபரின் ஆக்ஷன்தான் காரணமாம். மூன்று முறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டு, ஒரு முறை ஆஸ்கர் விருது வென்றிருக்கும் அழகி ஜெனிஃபர், இப்போது ஏஞ்சலினாவின் வாய்ப்புகளை தன்பக்கம் ஈர்த்துக்கொண்டிருக்கிறார். வெல்கம் தோழர்!

•  ஹாலிவுட் ஆக்ஷன் ஸ்டார் டாம் க்ரூஸின் எட்டு வயது மகள் சூரி க்ரூஸ், சமீபத்தில் 1,000 டாலர் பரிசுத் தொகையை அறிவித்திருக்கிறார். எதற்காக? தொலைந்துபோன தனது செல்ல நாய்க் குட்டியைக் கண்டுபிடித்துத் தருவோருக்காக! 'ரெண்டு வாரம் முன்னாடிதான் ஹனி (நாய்) என்கிட்ட வந்துச்சு. குளிக்கவைக்கலாம்னு கழுத்து காலரைக் கழட்டிவிட்டேன். சோப், துண்டு எடுத்துட்டுத் திரும்புறதுக்குள்ள காணாமப்போயிட்டா என் செல்லம்’ என்று சிணுங்குகிறாள் குட்டி க்ரூஸ். அப்பாகிட்ட சொல்லு செல்லம்!