வெளியானது 'ஸ்பைடர்' படத்தின் டீசர்! | Spyder Movie teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 08:36 (09/08/2017)

கடைசி தொடர்பு:09:04 (09/08/2017)

வெளியானது 'ஸ்பைடர்' படத்தின் டீசர்!

 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிவரும்  படம், 'ஸ்பைடர்.' முருகதாஸ், சிறு இடைவெளிக்குப் பின் தமிழில் இயக்கும் படம் என்பதாலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு  நேரடியாகத் தமிழில் நடிக்கும் முதல் படம் என்பதாலும், இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. 

spyder

இந்நிலையில், மகேஷ் பாபுவின் பிறந்த நாளான இன்று 'ஸ்பைடர்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார்.  ராகுல் பரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

 

முருகதாஸ் இயக்கத்தில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மகேஷ் பாபு, இந்தப் படத்தில் உளவாளியாக  நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு, நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க வாய்ப்புள்ளதாக முருகதாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close