இதுதான் ஓவியாவின் புது லுக்..!

புது லுக்கில் நடிகை ஓவியா

பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை நடிகை ஓவியா வெளியேறினார். இதையடுத்து, அவர் என்ன செய்கிறார், எங்கு இருக்கிறார்? என்ற பல கேள்விகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், ஓவியா தனது புது லுக்கை ரிவீல் செய்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தவரைக்கும் ஒவ்வொரு வாரமும் ஓவியா எவிக்‌ஷனுக்குத் தேர்வு செய்யப்பட்டாலும், ரசிகர்களின் ஏகபோக ஆதரவால், தொடர்ந்து காப்பாற்றப்பட்டார். அவர், பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களால் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஓவியா, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்து மருத்தவரிடம் ஆலோசனை பெற்றார். இதையடுத்து, அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். பிக் பாஸில் பங்கேற்றதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் ஓவியாவுக்குக் கிடைத்தனர். இந்நிலையில், தனது புது லுக்கை வெளியிட்டுள்ளார் ஓவியா.

ஹாலிவுட் நடிகை நடாலி டார்மர் முதல், நம்மூர் அக்ஷ்ரா ஹாசன் வரை பலர் இப்போது ஓவியா வைத்திருக்கும் இந்த ஹேர்ஸ்டைலை  வைத்து இருக்கிறார்கள். சில நாள்களுக்கு முன் சென்னை, சிட்டி சென்டரில் காணப்பட்ட ஓவியா, அதற்குள் வேறொரு கெட்டப்பில் காட்சியளிக்க ஆரம்பித்திருக்கிறார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!