ஹீரோவாக நடிக்கும் இமான் அண்ணாச்சி! | Imman Annachi is going to star in a lead role of a movie

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (09/08/2017)

கடைசி தொடர்பு:21:20 (09/08/2017)

ஹீரோவாக நடிக்கும் இமான் அண்ணாச்சி!

பக்கா, தெரு நாய்கள், குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம், மகஷின்டே பிரதிகாரம் படத்தின் ரீமேக், எனப் பல படங்களில் காமெடி ரோலில் நடித்து வரும் இமான் அண்ணாச்சி தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

imaan annachi

பாபா விக்ரம் என்ற இயக்குநர் எடுக்கவிருக்கும் 'நல்ல நேரம் வந்திருச்சு' படத்தில் இவர் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோவாக நடிப்பது பற்றி இமான் அண்ணாச்சியிடம் கேட்டால்,

''நான் ஹீரோவாக நடிப்பது பலருக்கு ஆச்சர்யமாகயிருக்கும். ஆனா, இதை மக்கள் பார்க்க வேண்டும். இந்தப் படத்தில் எனக்கு மூன்று கதாநாயகிகள். மூவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஆனால், முக்கியமான ஒரு பின்குறிப்பு... இந்தப் படத்தில் நாயகிகளுடன் ரொமான்ஸ் சீன்கள் இல்லை. ஏனென்றால், நானெல்லாம் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்துவிட்டால் கண்டிப்பாக மக்கள் திட்டுவார்கள். இதுதவிர 'குட்டிஸ் சுட்டீஸ்' என்னும் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறேன். அதில் இரண்டு ஹீரோயின்ஸ். 'சத்ரபதி' படத்தை இயக்கிய ஶ்ரீ மகேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். கண்டிப்பாகப் படத்தை பார்த்துவிட்டு, எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்'' என்று  கலகலப்பாகச் சொன்னார் இமான் அண்ணாச்சி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க