’மெர்சல்’ படத்தின் ’ஆளப்போறான் தமிழன்’ பாடல்..!

mersal

இயக்குநர் அட்லி, விஜய் கூட்டணியில் 'தெறி' படத்துக்குப் பிறகு உருவாகும் திரைப்படம் 'மெர்சல்'. விஜய் மூன்று வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் வடிவேலு, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூரியா மற்றும் பலர்  நடிக்கின்றனர்.

’ஆளப்போறான் தமிழன்’ பாடலைக் கேட்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் இசை வருகிற 20 -ம் தேதி வெளியாகயிருக்கிறது. இதற்கிடையில் இந்தப் படத்தின் 'ஆளப்போறான் தமிழன்'  என்கிற பாடல் மட்டும் இன்று வெளியாகும் என நேற்று அறிவித்திருந்தனர். இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், 3.30 மணிக்கே பாடல் வெளியிடப்படவுள்ளது என சோனி மியூசிக் நிறுவனம் 3 மணிக்கு அறிவித்தது. இந்த பாடலின் டீசரை படக்குழுவினர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டனர். ’Aalaporaan Thamizhan' என்கிற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். தற்போது ’ஆளப்போறான் தமிழன்’ பாடல் Saavn தளத்தில் வெளியாகிவுள்ளது.  

’ஆளப்போறான் தமிழன்’ பாடல் வரிகளைக் காண இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க

Do you like the story?

Please Appreciate the Author by clapping!