ஜெயம் ரவி நடிப்பில் வெளியானது ‘டிக் டிக் டிக்’ பட டீசர்! | 'Tik Tik Tik' movie teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (14/08/2017)

கடைசி தொடர்பு:18:30 (14/08/2017)

ஜெயம் ரவி நடிப்பில் வெளியானது ‘டிக் டிக் டிக்’ பட டீசர்!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டிக் டிக் டிக்

'மிருதன்' படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் அடுத்ததாக இயக்கும்' டிக் டிக் டிக்' படத்தின் டீசர் தான் தற்போது வெளியாகியுள்ளது. 

ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார்.  இதுவரை ஹாலிவுட்டை கலக்கிக் கொண்டிருந்த ஸோம்பி கான்செப்ட்டை, 'மிருதன்' படம் மூலமாக தமிழ்த் திரைப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தினார், இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். அது நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில், இந்தியாவின் முதல் விண்வெளிப் படம் என்ற அறிவிப்போடு வெளியான 'டிக் டிக் டிக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரையும் கவர்ந்தது. விண்வெளி வீரர்களின் உடையில் ஜெயம் ரவி இருக்கும் இந்தப் படம், இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.