வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (16/08/2017)

கடைசி தொடர்பு:19:41 (16/08/2017)

"அவர் நிலைமை யாருக்கும் தெரியாது...!" - கலங்கும் அல்வா வாசு குடும்பம்

தமிழ் சினிமாவில் 900 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகர் அல்வா வாசு. பிரபல நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்த இவர், தற்போது உடல்நலம் சரியில்லாமல் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து குடும்பத்தாரிடம் பேசினோம்.

alwa vaasu


’’கடந்த ஒரு வருடமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். டயாலிசிஸ் சிகிச்சை செய்துவந்தோம். இந்நிலையில் தற்போது கல்லீரல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் கால்கள் மற்றும் வயிறு வீங்கியுள்ளது. மூச்சு விட சிரமப்படுகிறார். கொஞ்சம் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம். அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். அதனால், மிகவும் கவனத்தோடு பார்த்து வருகிறோம்.

சினிமாவில் இருக்கும் யாருக்கும் இவர் இவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பது தெரியாமல் இருந்தது. இன்றுதான் தெரியப்படுத்தினோம். தெரிந்தவுடன் பொன்வண்ணன், கார்த்திக், சத்யராஜ் மற்றும் பலர் பேசினார்கள். அவர்களால் முடிந்த உதவியை செய்வதாக கூறியுள்ளனர்'' என்றனர். அல்வா வாசு பூரண குணம் அடைய வேண்டும் என்று பொன்வண்ணன் இறைவனிடம் பிராத்தனை வேண்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க