வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (17/08/2017)

கடைசி தொடர்பு:13:32 (17/08/2017)

’மெர்சல்’ படத்தின் ’நீதானே’ பாடல் டீசர்..!

விஜய் - அட்லி கூட்டணியில் இரண்டாவதாகவும், விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் மூன்றாவதாகவும் உருவாகிவரும் திரைப்படம், ‘மெர்சல்’. 'தெறி' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்யை வைத்து அட்லி இயக்குவதால், 'மெர்சல்' திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம். 

ஏற்கெனவே வெளிவந்த 'மெர்சல்' படத்தின் போஸ்டர்களும், 'ஆளப்போறான் தமிழன்' பாடலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் வேளையில், இன்று மாலை 'நீதானே' என்கிற மெலடி பாடல் வெளியாக உள்ளது. அந்தப் பாடலுக்கான டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஸ்ரேயா கோஷலின் மயக்கும் குரல்களில், 30 விநாடிகளுக்கு வெளியாகியிருக்கும் இந்த டீசர், முழுப்பாடலை கேட்கும் ஆவலைத் தூண்டுகிறது. பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கும் இந்தப் பாடலை, இன்று மாலை 6 மணிக்கு Saavn தளத்தில் வெளியிடுகின்றனர்.