வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (17/08/2017)

கடைசி தொடர்பு:16:35 (17/08/2017)

வசந்த பாலனின் அடுத்த படம் விரைவில் தொடக்கம்..!

'ஆல்பம்' படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் வசந்தபாலன். இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக 'வெயில்' மற்றும்  'அங்காடித் தெரு' ஆகிய படங்கள்.  இவரது 'காவியத் தலைவன்' திரைப்படம், தமிழக அரசின் சிறந்த படங்களுக்கான விருதை சமீபத்தில் வென்றது.

வசந்த பாலன்

'காவியத் தலைவன்' திரைப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், இவரது அடுத்த படங்களுக்கான அறிவிப்பு வெளிவராமலேயே இருந்தது. தற்போது, தனது அடுத்த படம் பற்றிப் பேசியுள்ளார் வசந்த பாலன்.

''என்னுடைய அடுத்த படத்துக்காக புதுமுகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில்தான் படத்தின் ஸ்க்ரிப்ட்டை எழுதி முடித்தேன். என்னுடைய படங்களில், புதுமுகங்களை நடிக்கவைக்கவே பெரிதும் விரும்புவேன். 'அங்காடித் தெரு' படத்தில் 200 புதுமுகங்களை நடிக்க வைத்தேன். இந்தப் படத்தின் ஜானர் 'அங்காடித் தெரு' மாதிரியான ஒரு கதை. இந்த வருட இறுதியில் படப்பிடிப்பை ஆரம்பித்து விடுவேன். படத்தின் பெயர் மற்றும் தயாரிப்பாளர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்’’ என்றார் இயக்குநர் வசந்த பாலன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க