"ஷக்தி, ஜூலியைத் திட்டாதீங்க...ப்ளீஸ்!" தனது ஆர்மிக்கு ஓவியா அட்வைஸ்! | Oviya's first video after bigg boss tamil

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (17/08/2017)

கடைசி தொடர்பு:11:11 (18/08/2017)

"ஷக்தி, ஜூலியைத் திட்டாதீங்க...ப்ளீஸ்!" தனது ஆர்மிக்கு ஓவியா அட்வைஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு, ஓவியா முதல்முறையாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஓவியா

அதில் ஓவியா, "எல்லாரும் எப்படி இருக்கீங்க. எனக்கு இவ்ளோ வரவேற்பு கிடைச்சது சந்தோஷமா இருக்கு. எதிர்பார்க்கவே இல்லை. தற்போது, பிக் பாஸில் ரொம்பக் கடினமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கிருக்கும்போது என்னை சிலர் கார்னர் செய்தது உண்மைதான். பிக் பாஸ் வீட்டிலிருந்து சிலர் தற்போது வெளியேறியுள்ளனர். ஜூலி, ஷக்தி ஆகியோர் வெளியே வந்ததும், அவர்களை சிலர் தவறாகப் பேசுகிறார்கள். மனிதர்கள் அனைவருமே தவறு செய்பவர்கள்தான். பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கே அரசு மன்னிப்பு வழங்குகிறது. அது இயல்பான ஒன்று. எனவே, அவர்களைத் திட்டவோ தவறாகப் பேசவோ வேண்டாம்.

ஒரு போட்டியாளராக நான் பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் செல்ல மாட்டேன். இனி என்னை படத்தில் காணலாம். படம் பிடித்தால் மட்டும் பாருங்கள் (சிரித்துக்கொண்டே). நான் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கிறேன். ஆரவால் நான் தற்போது மன அழுத்தத்தில் இல்லை. உண்மைக் காதல் எப்போதும் தோல்வியடையாது. என் காதல் தோல்வியடையாது. ஒருவர் மீது காதல் வைத்துவிட்டு, பின் அவரை என்னால் வெறுக்க முடியாது. 

இத்தனை பேர் என் மீது அன்பு வைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. Love You guys. நான் மருத்துவ சிகிச்சை எல்லாம் எடுக்கவில்லை. என்னை ஒரு விக் கம்பெனியினர் சந்தித்தனர். அப்போது அவர்கள் புற்றுநோய் நோயாளிகளுக்காக முடி தானம் செய்ய கேட்டனர். முடி போனால் அது மீண்டும் வளர்வது கஷ்டம். என் அம்மாவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்தான். எனவே, எனக்கு அந்த வலி தெரியும். அதனால்தான் நான் முடி வெட்டினேன். இது எனக்கு பிடித்துள்ளது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். 


ரோல் மாடலாக வைக்கும் அளவுக்கு எல்லாம் நான் இல்லை. நான் முழு நிறைவான ஆள் இல்லை. என்னை மட்டுமல்ல, யாரையும் காப்பியடிக்க வேண்டாம். உங்களது ஸ்டைலில் இருங்கள். இப்போது நான் கொச்சியில் இருக்கிறேன். போர் அடிக்குது என்றுதான் வீடியோ வெளியிட்டுள்ளேன்.


எல்லாரையும் பார்த்துப் பேச வேண்டும், கட்டிப்பிடிக்க வேண்டும் என்று ஆசை. அது முடியவில்லை. இந்த வீடியோமூலம் எல்லோரையும் கட்டிப்பிடிப்பதுபோல உணர்கிறேன். அனைவருக்கும் அன்பு நன்றி" என்று கூறியுள்ளார்.