'மெர்சல்’ படத்துக்காக ட்விட்டர் உருவாக்கிய எமோஜி..! #Mersal | Twitter created new emoji for mersal

வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (18/08/2017)

கடைசி தொடர்பு:15:53 (18/08/2017)

'மெர்சல்’ படத்துக்காக ட்விட்டர் உருவாக்கிய எமோஜி..! #Mersal

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்கும் படம் மெர்சல். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக  சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. தவிர ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி  ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20-ம் தேதி மிக பிரமாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில், இந்தப் படத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக ட்விட்டர், சோனி நிறுவனத்துடன் இணைந்து மெர்சல் எமோஜி வெளியிட்டுள்ளது. அந்த எமொஜியில் மெர்சல் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் ஸ்டில்லை வைத்து வடிவமைத்திருக்கிறார்கள். தமிழ்ப் படம் ஒன்றுக்கு ட்விட்டரில் எமோஜி வந்திருப்பது இதுவே முதன்முறையாகும். இனி ட்விட்டரில் மெர்சல் ட்வீட் போடுபவர்கள் எமோஜி வைத்தும் மெர்சல் செய்யலாம்.