வெளியானது மெர்சல் படப் பாடல்கள்..! | Vijay's Mersal movie songs has been released

வெளியிடப்பட்ட நேரம்: 19:39 (20/08/2017)

கடைசி தொடர்பு:10:05 (21/08/2017)

வெளியானது மெர்சல் படப் பாடல்கள்..!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மெர்சல்' படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியாகின. 

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் விஜய் இணைந்திருக்கும் இரண்டாவது படம் மெர்சல். இருவர் கூட்டணி அமைந்ததிலிருந்து ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பயங்கரமான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. விஜய்யின் 61-வது படமான மெர்சல் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தின் 'ஆளப் போறான் தமிழன்' மற்றும் 'நீதானே நீதானே' பாடல்கள் வெளியாகி வைரலாகியது. தற்போது இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. மெர்சல் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தின் பாடல்களை சாவன் இணையத்தில் கேட்கலாம். 
 


[X] Close

[X] Close