Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெளியேற்ற பட்ட காயத்ரி... பிக் பாஸ் ரசிகர்கள் சரமாரி கேள்வி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் காயத்ரியாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வளைதளங்களில் அவரை திட்டி தீர்த்திருந்தனர். அதேபோல, இன்று நடந்த பிக் பாஸ் இன்ராக்‌ஷன் சேஷனிலும் அது பிரதிபலித்தது. 


இன்று காயத்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கான நிகழ்வு இன்று நடந்தது.  ரசிகர்களின் கரகோஷத்துடன் காயத்ரி வெளியேறுகிறார் என்று கமல் இன்று அறிவித்தார். வீட்டில் இருப்பவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு கமலின் கேள்விகளுக்காக வந்தார். ரசிகர்களும் கமலின் கேள்விகளுக்காக காத்து இருந்தனர். ஆனால் ஒரு மாறுதலுக்காக, இந்த முறை கேள்வி கேட்டது பிக் பாஸ் ரசிகர்கள்தான். ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களின் கேள்விகளை அந்த நிகழ்ச்சியில் இருந்த ரசிகர்கள் கேள்விகளாக கேட்டனர். 
ஓவியா, பரணிக்கு ஆதரவாக பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் கேட்டார்கள். ரசிகர்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்லிக் கொண்டு இருந்தார் காயத்ரி. ஓவியாவை மிஸ் செய்தீர்களா என்ற கேள்விக்கு ஒட்டு மொத்த வீடே ஓவியாவை மிஸ் செய்தது என்று பதில் சொன்னார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement