காதலரை மணக்கும் நடிகை பிரியாமணி

பருத்திவீரன் படத்தின் மூலமாக ஃபேமஸ் ஆனவர் நடிகை பிரியாமணி. இந்தப் படத்துக்காக இவருக்குத் தேசிய விருது கிடைத்தது. இருந்தாலும், அதன்பிறகு இவருக்குத் தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை.

priyamani

பொன்குமரன் இயக்கத்தில் சாருலதா திரைப்படம்தான் தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியானது. அதன்பிறகு, பிரியாமணி பிறமொழி படங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறார். இடையில் தமிழில் இவர் ஒரு நடன நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்றார். அதன்பிறகு தமிழ் ரசிகர்கள் கண்ணில் படமால் இருந்த பிரியாமணி தனது காதலரைக் கைப்பிடிக்கப்போகிறார். இவர்களின் திருமணம் வருகின்ற 23-ம் தேதி நடைபெறவுள்ளது.

பதிவுத்திருமணம் செய்யவுள்ள பிரியாமணிக்கு நமது வாழ்த்துகளைச் சொல்ல அழைத்தபோது,

''மிகவும் நன்றி, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தற்போது மிகவும் பிஸியாக இருப்பதால் திருமணம் முடிந்தவுடன் தமிழ் ரசிகர்களுக்காகப் பேசுகிறேன்'' என்று கூறியுள்ள பிரியாமணி திருமணத்துக்குப் பிறகும் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!