வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (22/08/2017)

கடைசி தொடர்பு:12:05 (22/08/2017)

ஆகஸ்ட் 26 -ம் தேதி சினிமா படப்பிடிப்புகள் ரத்து!

ஜி.எஸ்.டி மற்றும் கேளிக்கை வரிகள் காரணமாக, சில நாள்களுக்கு முன்பு சினிமா படப்பிடிப்புகள் காலவரையற்ற ரத்துசெய்யப்பட்டன. அதன்பிறகு, பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் மோதல் காரணமாகவும் பல திரைப்படங்கள் ரத்துசெய்யப்பட்டன. 

தியேட்டர்

இந்நிலையில், தற்போது ஆகஸ்ட் 26 -ம் தேதி சினிமா படப்பிடிப்புகள் ரத்து என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, மோதல் காரணமாக இல்லை. அதற்கு மாறாக,  வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி சனிக்கிழமை தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை  சண்டை இயக்குநர்கள் மற்றும் சண்டைக் கலைஞர்கள் சங்கத்தின் 50-ம் ஆண்டு பொன்விழா, சென்னையில் பிரமாண்டமாகக் கொண்டாடப்படவுள்ளது. 

அதனால், அன்றைய தினம் படப்பிடிப்புகளை ரத்துசெய்யுமாறு ஸ்டன்ட் யூனியன் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவர்களின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 26-ம் தேதி படப்பிடிப்புகள் ரத்துசெய்யப்படுவதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க