Published:Updated:

Ajith: துப்பாக்கி சுடும் போட்டி பதக்கங்களைக் குவித்த அஜித்; வென்ற பதக்கங்கள் இவைதான்!

அஜித்

துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் குமார் வென்ற பதக்கங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

Ajith: துப்பாக்கி சுடும் போட்டி பதக்கங்களைக் குவித்த அஜித்; வென்ற பதக்கங்கள் இவைதான்!

துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் குமார் வென்ற பதக்கங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
அஜித்

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் அஜித் குமார் திருச்சிக்கு சென்றிருந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. திருச்சியில் நடைபெற்று வரும் 47-வது மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்வதற்காக அஜித் சென்றிருக்கிறார் என செய்திகள் வெளியாகின. அங்கு நடைபெற்ற போட்டியில் அஜித் குமார் வென்று பதக்கங்களை வென்றிருக்கிறார்.

துப்பாக்கி சுடும் போட்டி
துப்பாக்கி சுடும் போட்டி
அஜித்
அஜித்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடிகர் அஜித்குமார், சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கம் என 4 தங்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார்.