Published:Updated:

``தெற்கில் அந்தப் பழக்கமில்லை; பாலிவுட்டில்தான்..." - துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

நீங்கள் சமூக ஊடகங்களில் எதை வேண்டுமானாலும் எழுதலாம், அதனால் மக்கள் எந்தப் பொறுப்பும் இல்லாமல் தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரலுடன் விஷயங்களை எழுதத் தொடங்குகிறார்கள்.

``தெற்கில் அந்தப் பழக்கமில்லை; பாலிவுட்டில்தான்..." - துல்கர் சல்மான்

நீங்கள் சமூக ஊடகங்களில் எதை வேண்டுமானாலும் எழுதலாம், அதனால் மக்கள் எந்தப் பொறுப்பும் இல்லாமல் தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரலுடன் விஷயங்களை எழுதத் தொடங்குகிறார்கள்.

Published:Updated:
துல்கர் சல்மான்

குறுகிய காலத்திலேயே திரையுலகில் தனக்கான இடத்தைப் பதித்த இளம் நடிகர் துல்கர் சல்மான். இவர் நடித்து சமீபத்தில் வெளியான சீதா ராமம் திரைப்படம் இந்திய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது.

தற்போது இவர் நடிப்பில் வெளியாக உள்ள படம் chup. இப்படத்தை பா, ஷமிதாப் ஆகிய படங்களை இயக்கி புகழ் பெற்ற பால்கி இயக்கியுள்ளார். பாலிவுட் நடிகர் சன்னி டியோல், துல்கல் சல்மான், ஸ்ரேயா தன்வந்திரி, பூஜா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 23 தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் துல்கர் சல்மான் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்பேட்டியில் பாலிவுட் சினிமாவின் ‘பாய்காட்’ பிரசாரம் குறித்து பேசியிருக்கிறார். ``சமூக ஊடகங்களால்தான் பாய்காட் கலாசாரம் அதிகமாக உள்ளது.

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

நீங்கள் சமூக ஊடகங்களில் எதை வேண்டுமானாலும் எழுதலாம், அதனால் மக்கள் எந்தப் பொறுப்பும் இல்லாமல் தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரலுடன் விஷயங்களை எழுதத் தொடங்குகிறார்கள். தெற்கில் (south indian cinema) இதுபோன்ற படத்தை புறக்கணிக்கும் (பாய்காட்) கலாசாரம் இல்லை. பாலிவுட்டில்தான் இதுப்போன்ற புறக்கணிப்பு பற்றியெல்லாம் கேட்கிறோம்" என்று கூறியிருக்கிறார். சமீபகாலமாகவே சில திரைப் பிரலங்களும் அவர்கள் நடித்த படங்களும், பாய்காட் பிரச்சாரம் மூலம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.