Published:Updated:

``உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன்; லவ் யூ நானா; லவ் யூ மை சூப்பர் ஸ்டார்"- மகேஷ் பாபு நெகிழ்ச்சி!

மகேஷ் பாபு

நடிகர் மகேஷ் பாபு, தன் தந்தையின் மறைவு குறித்து உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

``உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன்; லவ் யூ நானா; லவ் யூ மை சூப்பர் ஸ்டார்"- மகேஷ் பாபு நெகிழ்ச்சி!

நடிகர் மகேஷ் பாபு, தன் தந்தையின் மறைவு குறித்து உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

Published:Updated:
மகேஷ் பாபு
தெலுங்குத் திரையுலகில் 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் தெலுங்கு திரையுலகில் 'சூப்பர் ஸ்டார்' என்ற நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வந்த பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா.

நடிகர் கிருஷ்ணா (80), உடல்நலக் குறைவால் கடந்த நவம்பர் 15 ம் தேதி அன்று காலமானார். கிருஷ்ணாவின் மறைவு தெலுங்குத் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பு என்று பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினரும், "ஒவ்வொரு நாளும் அவரை நாம் இழக்க நேரிடும்… ஆனால் பலர் சொல்வது போல், 'விடைபெறுவது என்பது என்றென்றும் இல்லை. நாங்கள் மீண்டும் அவரைச் சந்திக்கும் வரை…” என்று உருக்கத்துடன் சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில், அவரின் மகனும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகருமான மகேஷ் பாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் தந்தையின் மறைவு குறித்து, "உங்கள் வாழ்க்கை கொண்டாடப்பட்டது. உங்கள் மறைவுக்குப் பிறகு அது இன்னும் அதிகமாகக் கொண்டாடப்படுகிறது. அதுதான் உங்கள் மகத்துவம்! நீங்கள் உங்கள் வாழ்க்கையை அச்சமின்றி வாழ்ந்தீர்கள். எனது உத்வேகம்... எனது தைரியம்... மற்றும் முக்கியமானவை என்று நான் நினைத்த அனைத்தும் உங்களோடு போய்விட்டன. இதுவரை உணராத வலிமையை இப்போது நான் என்னுள் உணர்கிறேன்... இப்போது நான் அச்சமற்றவனாக இருக்கிறேன்... உங்களின் ஒளி என்றென்றும் என்னுள் பிரகாசிக்கும். உங்களின் லெகசியை முன்னெடுத்துச் செல்வேன். உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன்... லவ் யூ நானா... மை சூப்பர் ஸ்டார் " என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.