Published:Updated:

லதா மங்கேஷ்கர் தமிழில் முதல் பாடல் பாடியது இப்படிதான் - நெகிழும் நடிகர் பிரபு

சிவாஜி - லதா மங்கேஷ்கர்

‘‘அப்பாவுக்கு உடன்பிறவா சகோதரி அவங்க. 1960கள்ல அப்பாவோட படங்கள பார்த்துட்டு லதா மங்கேஷ்கரும் அவங்களோட குடும்பத்தினரும் அப்பாவை சந்திக்கணும்னு மும்பையில இருந்து இங்கே வந்து அப்பாவை சந்திச்சாங்க". - நடிகர் பிரபு

லதா மங்கேஷ்கர் தமிழில் முதல் பாடல் பாடியது இப்படிதான் - நெகிழும் நடிகர் பிரபு

‘‘அப்பாவுக்கு உடன்பிறவா சகோதரி அவங்க. 1960கள்ல அப்பாவோட படங்கள பார்த்துட்டு லதா மங்கேஷ்கரும் அவங்களோட குடும்பத்தினரும் அப்பாவை சந்திக்கணும்னு மும்பையில இருந்து இங்கே வந்து அப்பாவை சந்திச்சாங்க". - நடிகர் பிரபு

Published:Updated:
சிவாஜி - லதா மங்கேஷ்கர்

நேற்றைய தினம் இந்தியாவின் இசைக்குயில் லதாமங்கேஷ்கர் தனது 92வயதில் மறைந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் ஒருவராகவே இருந்தவர் லதா மங்கேஷ்கர். அவரைப் பற்றிய நினைவுகள் குறித்து இங்கே மனம் திறக்கிறார் இளைய திலகம் பிரபு.

‘‘அப்பாவுக்கு உடன்பிறவா சகோதரி அவங்க. 1960கள்ல அப்பாவோட படங்கள பார்த்துட்டு லதாமங்கேஷ்கரும் அவங்களோட குடும்பத்தினரும் அப்பாவை சந்திக்கணும்னு மும்பையில இருந்து இங்கே வந்து அப்பாவை சந்திச்சாங்க. ‘இனி நான் உங்கள அண்ணன்தான் கூப்பிடுவேன்‘னு பாசத்தோடு சொன்னாங்க. அன்னிக்கு ஏற்பட்ட பந்தம் இப்ப வரை ரொம்ப நெருங்கிய சொந்தமா மாறிடுச்சு. எங்க ஃபேமிலியில உள்ள ஒவ்வொருத்தரையும் பெயர் சொல்லி கூப்பிடுற அளவுக்கு அவங்க பிரியமா இருப்பாங்க. அவங்க சென்னை வந்தால், முன்னாடி ஹோட்டல்லதான் தங்கினாங்க. அங்கே அவங்களுக்கு சாப்பாடு பிடிக்காமல் போச்சுனு சொன்னதும், எங்க வீட்டுல இருந்து சாப்பாடு போகும். அப்புறம், எங்க வீட்டு காம்பவுண்ட்ல அப்பா சின்னதா ஒரு காட்டேஜ் கட்டியிருந்தாங்க. அவங்க சென்னை வந்தால், இந்த காட்டேஜ்லதான் தங்கினாங்க. எங்க வீட்டு திருமணங்கள் எல்லாத்துக்கும் வந்து சிறப்பிச்சிருக்காங்க. விக்ரம் பிரபு கல்யாணத்துக்கு மட்டும் அவங்க உடல்நிலைனால வரமுடியாமப் போச்சு. ஆனாலும் போன் செய்து வாழ்த்தினாங்க.

லதா மங்கேஷ்கர் சிவாஜி கணேசனுடன்
லதா மங்கேஷ்கர் சிவாஜி கணேசனுடன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்பா ஒருமுறை அவங்ககிட்ட ‘பிரபு படத்துக்கு நீ ஒரு பாட்டு பாடணும்‘னு கேட்டாங்க.. அவங்களுக்கு சந்தோஷமாகிடுச்சு. ‘யார் இசையமைக்கறா?‘னு கேட்டாங்க. ‘ராஜா தான் மியூசிக்‘னு அப்பா சொன்னதும் அவங்களுக்கு இன்னும் சந்தோஷம் ‘கண்டிப்பா வர்றேன். என் புள்ள பிரபு. அவன் படத்துக்கு கண்டிப்பா பாடுவேன்‘னு அவங்க செலவிலேயே மும்பையில இருந்து இங்கே வந்து பாடினாங்க. பணமும் வாங்கிக்கல. ‘ஆராரோ.. ஆராரோ.. நீ வேறோ நான் வேறோ‘ பாடலை பாடினாங்க.

அதுமட்டுமல்ல. தீபாவளிக்கு வருஷா வருஷம் அவங்க குடும்பத்திலிருந்து எங்க வீட்டுல உள்ள எல்லாருக்கும் டிரெஸ் எடுத்து கொடுத்து அனுப்பி வைப்பாங்க. அதே மாதிரி அவங்களுக்கு நாங்க இங்கிருந்து அனுப்பி வைப்போம். அவங்கள அத்தைனு தான் கூப்பிடுவேன். அப்பா இறந்து பத்து நாட்களுக்கு பிறகு வீட்டுக்கு வந்திருந்தாங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவங்க இறக்கறதுக்கு இரண்டு வாரத்துக்கு முன்னாடி கூட வாட்ஸ் அப்பில் அவங்களோட தொடர்பில் தான் இருந்தேன். என் அண்ணன்கிட்ட அடிக்கடி பேசுவாங்க. வாட்ஸ் அப்பிலும் அவங்களுக்கு போட்டோஸ் மட்டும்தான் அனுப்பத்தெரியும். அப்பாவோட புகைப்படங்கள் நிறைய அனுப்புவாங்க. அப்பா போட்டோவுக்கு கீழே ‘அண்ணா.. அண்ணா’னு பிரியத்தோடு எழுதியிருப்பாங்க. அவங்கள நாம இசைக்குயில்தான் சொல்வோம். அவ்வளவு இனிமையான குரல்.. சரஸ்வதியின் அருள் படைச்சவங்க.. தேசபக்தி அதிகம் உள்ளவங்க. ராணுவ வீரர்களை பத்தி அவங்க பாடின பாட்டு, நமக்கு மொழி தெரியலைனாலும் கூட நமக்கு இப்பவும் மெய்சிலிர்க்கும். அவங்கள இழந்துட்டோம். அவங்களோட இழப்பு இந்திய திரையுலகிற்கே பெரிய இழப்பு. அவங்க அண்ணன் கூட சேர்ந்து அவங்க ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக்கறேன்‘‘ – என கண்ணீர் மல்க நெகிழ்ந்தார் பிரபு.