Published:Updated:

``பொய் தகவல் பரப்புகிறார்கள். உண்மை இதுதான்" - சினேகா அளித்த மோசடி புகார் குறித்து பிரசன்னா!

அந்தக் கம்பெனி தங்களை மோசடி செய்துவிட்டதாகவும் சினேகா தரப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்பேரில் முதற்கட்ட விசாரணை நடந்துவருகிறது

சமீபத்தில் நடிகை சினேகா தரப்பில் கானத்தூர் காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டடது.அந்த புகாரில் ``ஆந்திர கம்பெனியில் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும், அந்தக் கம்பெனி தங்களை மோசடி செய்துவிட்டதாகவும் சினேகா தரப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்பேரில் முதற்கட்ட விசாரணை நடந்துவருகிறது" என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சினேகா - பிரசன்னா
சினேகா - பிரசன்னா

நடிகை சினேகா தரப்பில் மோசடி புகார் கொடுக்கப்பட்ட தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் சூழலில் இதுகுறித்து நடிகர் பிரசன்னாவிடம் பேசினேன். அவர் கூறியதாவது, `` ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக நாங்கள் முதலீடு செயய்திருந்தோம். அதுவும் அவர்கள் கேட்ட தொகையிலிருந்து ஒரு பங்கைதான் நாங்கள் கொடுத்தோம். 6 மாதம் கழித்து மேற்கொண்டு முதலீடு செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்கிறோம் என்றுதான் அந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டிருந்தோம். அந்தப் பணத்தை எங்களின் வங்கிக் கணக்கிலிருந்து அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்வர் செய்தோம். நாங்கள் எதிர்பாரத்தபடி இல்லாததால்,பண்ணிய முதலீட்டு தொகை திருப்பிக் கேட்டிருந்தோம். அதை அவர்கள் தருவதற்கு கால தாமதமானதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என காவல் நிலையத்தில் புகாரளித்தோம். விஷயம் இவ்வளவுதான். ஆனால், நாங்கள் அதிக வட்டிக்குக் கடன் கொடுத்தோம் என்றெல்லாம் செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. " என்றார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு