Published:Updated:

“இது கடற்கரை காதல்!”

குப்பன் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
குப்பன் படத்தில்...

என் பையன் தேவ் சரண்ராஜ்தான் ஹீரோ. பைலட்டுக்குப் படிச்சுத் தேர்வாகியிருந்தான். கொரோனாவில் விமான சர்வீஸ் எல்லாம் குறைஞ்சு பிரச்னையாகிவிட்டது

“இது கடற்கரை காதல்!”

என் பையன் தேவ் சரண்ராஜ்தான் ஹீரோ. பைலட்டுக்குப் படிச்சுத் தேர்வாகியிருந்தான். கொரோனாவில் விமான சர்வீஸ் எல்லாம் குறைஞ்சு பிரச்னையாகிவிட்டது

Published:Updated:
குப்பன் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
குப்பன் படத்தில்...

``சென்னையில் பாலவாக்கத்தில்தான் 35 வருஷத்துக்குமேல இருக்கேன். ஷூட்டிங் இல்லைன்னா எப்பவும் கடற்கரை வாசம்தான். என் ஃப்ரெண்ட் குப்பன் இங்கேதான் இருக்கான்... ‘இங்கே இவ்வளவு பேரோட பழகியிருக்கே. ஒரு கதை தோணலையா உனக்கு'ன்னு கேட்டான். அவன்கிட்ட இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவே இல்லை. அன்னிக்கு ராத்திரி பூரா யோசனையிலிருந்து ஒரு கதை ரெடி பண்ணிட்டேன். அதுதான் `குப்பன்.' ஒரு மீனவப் பையனுக்கும், மார்வாடி பெண்ணுக்கும் இடையிலான கதை. படம் பாத்துட்டு வரும்போது காதல்ங்கிறது எவ்வளவு அழகானதுன்னு உணர முடியும்'' - இயல்பாகப் பேசுகிறார் இயக்குநர் - நடிகர் சரண்ராஜ். 600 படங்களுக்கு மேல் நடித்த அனுபவம் செறிந்த நடிகர்.

“இது கடற்கரை காதல்!”

“ 'குப்பன்’ எப்படியிருக்கும்?”

“மீனவர்கள் மிகவும் நட்புணர்வோடு வாழ்பவர்கள். அவங்களுக்குள்ளே இருக்கிற கதையே ஒரு நூறு தேறும். நான் அதில் ஆழமா போகாமல், அழகான காதலைக் கதையா பிரிச்சுச் சொல்லியிருக்கேன். தன்னை அண்ணாந்து பார்க்கிற அடித்தட்டு மக்களை தமிழ் சினிமா குனிஞ்சு பார்க்கிறதே இல்லை. அப்படிப் பார்க்கிற முயற்சிதான் இது.

என் பையன் தேவ் சரண்ராஜ்தான் ஹீரோ. பைலட்டுக்குப் படிச்சுத் தேர்வாகியிருந்தான். கொரோனாவில் விமான சர்வீஸ் எல்லாம் குறைஞ்சு பிரச்னையாகிவிட்டது. அப்புறம் நான் நடிக்கிறேன்னு வந்தவனை இன்ஸ்டிட்யூட் அனுப்பித் தயார் பண்ணி ஹீரோவாக்கிட்டேன். பிரமாதமா செய்திருக்கான். சுஷ்மிதா, பிரியதர்ஷினி என இரண்டு ஹீரோயின்கள் அறிமுகமாகிறாங்க. ஆதின்னு இன்னொரு ஹீரோவையும், கார்த்திங்கிற வில்லனையும் அறிமுகப்படுத்துறேன். இவங்க எல்லோர் மேலேயும் நல்ல வெளிச்சம் விழ சான்ஸ் இருக்கு. நிச்சயம் ஒரு நல்ல கடற்கரைக் காதலுக்கு உங்களை அழைச்சிட்டுப் போவேன்.''

சரண்ராஜ், தேவ் சரண்ராஜ்
சரண்ராஜ், தேவ் சரண்ராஜ்

“வில்லனாகவே கொடி நாட்டினீர்கள்...”

“ஆனால் இப்பப் பாருங்க, ஹீரோக்கள் எல்லாம் வில்லனாக மாறுகிறார்கள். ‘கே.ஜி.எஃப்'-ல அவ்வளவு பெரிய ஹீரோ சஞ்சய் தத் வில்லனா வர்றார். வில்லனுக்கு இப்ப குடும்பம் இருக்கு. அவருக்குப் பாட்டுகூட வைக்கிறாங்க. கமல் சாரே விஜய் சேதுபதி, பகத், சூர்யான்னு இடம் கொடுத்திட்டு நடிக்கிறார். 1982-ல் முரளியின் அப்பா சித்தலிங்கையா `பராஜிதா'ன்னு ஒரு படம் எடுத்து எனக்கு சான்ஸ் கொடுத்தார். படம் பெரிய ஹிட். சனிக்கிழமை வரைக்கும் டீ குடிக்கக் காசு இல்லாமல் இருந்தேன். திங்கட்கிழமை ஒரு லட்சம் கையில் வந்துடுச்சு. ‘பூ ஒன்று புயலானது’ன்னு தமிழில் வந்த படம் தெலுங்கில் ‘பிரதிகட்னா’ன்னு வந்தது. அதுவும் பெரிய ஹிட். அப்புறம் விஜய் அப்பா என்னை ‘நீதிக்குத் தண்டனை'யில் அறிமுகப்படுத்தினார். ஓவர்நைட் பெரிய ஆளாகிட்டேன்.''

“இது கடற்கரை காதல்!”

“மிகவும் கஷ்டப்பட்டு வந்தவர்னு உங்களைச் சொல்லுவாங்க...”

“ஐந்து பேர் அக்கா தங்கச்சி. அப்பா மாற்றுத்திறனாளி. நான் சினிமாவுக்குப் போறேன்னு சொன்னதும் அடிச்சிட்டார். வீட்ல இருந்த ஆறாயிரம் ரூபாயைத் தூக்கிட்டு பெங்களூர் போயிட்டேன். படாத கஷ்டம் இல்லை. நைட் கிளப்பில் பத்து ரூபாய்க்குப் பாடியிருக்கேன். எத்தனையோ நாள் வெறும் தண்ணியைக் குடிச்சிட்டுத் தூங்கியிருக்கேன். சித்தலிங்கையா படம் வந்ததும் பணம் வாங்கிட்டு ப்ளைட் பிடிச்சு ஊருக்குப் போனேன். இறங்கினா வெளியே 4000 பேருக்கு மேலே இருக்காங்க. யாரோ அரசியல்வாதி வர்றாங்க போலன்னு நினைச்சேன். கிட்டப்போய்ப் பார்த்தால் எனக்குத்தான் அந்தக் கூட்டம். அப்பா என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு அழுதார். அன்னிக்கு இருந்த அந்த சந்தோஷம் இன்னைக்கு வரைக்கும் மனசுல இருக்கு.''

“இது கடற்கரை காதல்!”
“இது கடற்கரை காதல்!”

“இயக்குநர் ஷங்கர் உங்களுக்கு ரொம்பப் பழக்கமாச்சே!”

“எஸ்.ஏ.சந்திரசேகர் சார்கிட்ட ஷங்கர் உதவியாளரா இருக்கும்போதே நல்லாத் தெரியும். சார் யாரையாவது ஜாடை மாடையா திட்டணும்னா, இவரைத்தான் திட்டுவார். டைரக்டர் எதாவது திட்டிட்டா என்கிட்ட வந்துதான் ஷங்கர் அழுவார். ‘ஒவ்வொரு அடிக்கும் நீ நிறைய ஹிட் கொடுக்கப் போறே’ன்னு அவரைத் தேத்தி அனுப்புவேன். அவரோட உழைப்புக்கு அவர் இன்னும் நல்லா இருப்பார்!''