Published:Updated:

மம்முட்டி - ஜோதிகா 'காதல்' பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்ற சூர்யா... ஜியோ பேபியின் அரசியல் கதை!

காதல் சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் மம்முட்டியுடன் சூர்யா

"தீக்கோயி கிராம பஞ்சாயத்து 3-ம் வார்டு தேர்தலில் இடது சுயேச்சை வேட்பாளரான 'மாத்யூ தேவசியே' டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்" என்ற தேர்தல் விளம்பரம் மம்முட்டியின் போட்டோவுடன் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

ரண்டு பெண்குட்டிகள், குஞ்ஞி தெய்வம், தி கிரேட் இந்தியன் கிச்சன், பிரீடம் பைட் உள்ளிட்ட சினிமாக்களை இயக்கிய இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் உருவாகும் 'காதல்' சினிமாவில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும், ஜோதிகாவும் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர்.

மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இந்த சினிமா மூலம் பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்கிறார் ஜோதிகா. கேரள மாநிலம் கொச்சி கோலஞ்சேரி ப்ரூக்சைட் கிளப்பில் நடக்கும் படபிடிப்பு செட்டுக்கு விருந்தினராக நடிகர் சூர்யா சென்றார். மம்முட்டி மற்றும் காதல் படபிடிப்பு குழுவினருடன் நீண்டநேரம் உரையாடிய சூர்யா, ஷூட்டிங் ஸ்பாட்டில் உணவு சாபிட்டுவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

படக்குழுவினருடன் சாப்பிட்ட சூர்யா
படக்குழுவினருடன் சாப்பிட்ட சூர்யா

இந்த நிலையில் 'காதல்' சினிமாவில் மம்முட்டி அரசியல்வாதியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலாவைச் சேர்ந்த மேத்யூ தேவசி என்ற கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிக்கிறார். "தீக்கோயி கிராம பஞ்சாயத்து 3-ம் வார்டு தேர்தலில் இடது சுயேச்சை வேட்பாளரான 'மாத்யூ தேவசியே' டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்" என்ற தேர்தல் விளம்பரம் மம்முட்டியின் போட்டோவுடன் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

சினிமா காட்சியில் வெளியான மம்முட்டியின் தேர்தல் விளம்பர பதாகை
சினிமா காட்சியில் வெளியான மம்முட்டியின் தேர்தல் விளம்பர பதாகை

கோட்டயம் மாவட்டம் மீனச்சல் தாலுகாவில் அமைந்துள்ளது தீக்கோயி கிராம பஞ்சாயத்து. இது சினிமா இயக்குனர் ஜியோ பேபியின் சொந்த பஞ்சாயத்தான தாழநாட்டின் தொட்டடுத்த பஞ்சாயத்தாகும். இயக்குனர் ஜியோ பேபியின் தந்தை பேபி பஞ்சாயத்து செயல் அலுவலராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். எனவே தந்தையின் பணி அனுபவ தாக்கம் காதல் சினிமாவிலும் இருக்கும் என்கிறார்கள்.