பிரீமியம் ஸ்டோரி

வைகை புயல் வடிவேலு, கொரோனா ஊரடங்கு காலத்தில் சொந்த ஊரான மதுரையில்தான் தங்கியிருந்தார். அப்படி நிம்மதியாக மதுரையில் தங்கியிருந்த காலத்திலும் தேவையில்லாத வம்புகள் அவரைத் தேடி வந்தன. அவற்றையெல்லாம் ஊதித் தள்ளினார்.

மதுரை விகடன்: மதுரைக்கு வந்தா வடிவேலு என்ன பண்ணுவார்?!

சமீபத்தில் கூட அவர் பாஜகவில் சேரப்போகிறார் என்ற வதந்தி உலவத் தொடங்கியது. இதனால் மொபைலையே ஸ்விட்ச் ஆப் செய்தார். இதைப்பற்றி அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, ‘பாஜகவில் சேர எல்லோரையும் கூப்பிடுவது போல் வடிவேலுவையும் அக்கட்சியின் முக்கியப் புள்ளிகள் கூப்பிடுவது உண்மைதான், ஆனால் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கவே வடிவேலு விரும்புகிறார். இதை அவர்களிடம் தெரிவித்துவிட்டார்’ என்றனர்.

மதுரை விகடன்: மதுரைக்கு வந்தா வடிவேலு என்ன பண்ணுவார்?!

மதுரை வந்தால் ஐராவதநல்லூர் வீட்டில் தங்கும் வடிவேலு, சமீபகாலமாக அங்கு தங்குவதில்லை. கருப்பாயூரணியிலுள்ள மகள் வீட்டில் தங்குகிறார் என்று சொன்னார்கள். கருப்பாயூரணியில் பெரும்பாலானோருக்கு வடிவேலு அங்கு வந்து செல்வது தெரியவில்லை. ஊர் எல்லை முடியும் பகுதியில் வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதியில் உள்ளது அவர் மகள் வீடு. அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் நம்மிடம் பேசும்போது, “கொரோனா ஊரடங்கு நாளில் இங்குதான் நாட்களைக் கழித்தார் வடிவேலு. காலையில தலையில துண்டைக் கட்டிக்கிட்டு டவல வச்சு மொகத்தை மூடிக்கிட்டு இந்தப்பக்கமும் அந்தப் பக்கமும் வாக்கிங் போவாரு. கொரோனா காலம் என்பதால் நாங்க அவரை தொந்தரவு பண்றதில்லை. எட்ட நின்னு பார்ப்போம். அவர் பாட்டுக்கு வந்துட்டு அவர் பாட்டுக்கு போயிடுவாரு....” என்றனர்.

தன்னால் தன் குடும்பத்தினரின் பிரைவசி போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் வடிவேலு, மதுரை, மானாமதுரை பக்கம் சொந்த பந்தங்களை பார்க்க அடிக்கடி வந்தாலும் அது வெளியில் தெரியாத வகையில் ஆர்பாட்டமில்லாமல் வந்து செல்கிறார்.

அவர் நினைத்திருந்தால் பிள்ளைகளின் திருமண விழாக்களை வி.ஐ.பிக்கள் அனைவரையும் அழைத்து பிரமாண்டமாக நடத்தியிருக்கலாம். ஆனால், அதை விரும்பவில்லை. மகன் திருமணத்தை தொடர்ந்து மகள் திருமணத்தையும் மதுரையில் வைத்து ரொம்ப சிம்பிளாக நடத்தி னார். அதே நேரம் ஊர்க்காரர்களுக்கு சர்ப்பரைஸ் கொடுத்து சந்தோசப்படுத்துவார்.

மதுரை விகடன்: மதுரைக்கு வந்தா வடிவேலு என்ன பண்ணுவார்?!

கடந்த வருடம் மனைவியின் ஊர் திருவிழாவில் கலந்துகொள்ள திருப்புவனம் அருகிலுள்ள கிராமத்துக்கு சென்றவர், மக்கள் எதிர்பார்க்காத வகையில் மேடையில் ஏறி பாட்டு பாட, மக்கள் மகிழ்ந்தார்கள். அவர் கலந்து கொண்ட விஷயம் மறுநாள்தான் ஊடகத்தினருக்குத் தெரிந்தது.

அந்தளவுக்கு தன் நடமாட்டத்தை மதுரை, மானாமதுரை பக்கம் வைத்திருக்கும் வடிவேலு சமீபகாலமாக மன ரீதியாகவும் பண ரீதியாகவும் பல சங்கடங்களை சந்தித்துள்ளார். அவரை வைத்து படம் எடுக்கிறேன் என்று சொல்லி ஒரு கும்பல் ஆட்டையைப் போட்டு சென்றுள்ளது. இன்னும் சிலர் உறவுகள், நண்பர்கள் என்று வந்து சொத்து முடிக்கலாம் என்று சொல்லி தேவையில்லாத வில்லங்கத்தை கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள். அதனால் மன அமைதிக்காகவும் கொரோனா பாதுகாப்புக்காகவும் கருப்பாயூரணி மகள் வீட்டில் வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு