Published:Updated:

“பத்து வருஷமா நான் லாக்டெளன்லதான் இருக்கேன்!” - நெகிழ்ந்த வடிவேலு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கங்கை அமரன், சந்தான பாரதி, மனோபாலா, வடிவேலு
கங்கை அமரன், சந்தான பாரதி, மனோபாலா, வடிவேலு

உங்களுக்கெல்லாம் ஒரு வருஷம்தான் லாக்டௌன்; நான் பத்து வருஷமாவே லாக் டௌன்லதானே இருக்கேன்.

பிரீமியம் ஸ்டோரி
ண்பதுகளின் நட்சத்திரங்கள் வருடத்துக்கு ஒருமுறை சங்கமிக்கிற நிகழ்வு தமிழ் சினிமா அறிந்ததே. சினிமாக்காரர்கள் மட்டுமே கலந்து கொள்கிற நிகழ்வு இது. இன்னொரு நிகழ்வும் கடந்த சில ஆண்டுகளாக அவ்வளவாக வெளியில் தெரியாதபடி நடந்துவருகிறது. அது, முன்னணி ஹீரோ, ஹீரோயின்கள், இயக்குநர்கள் தொடங்கி சீனியர் நடிகர்கள், புதுமுகங்கள் வரையிலான சினிமா ஆர்ட்டிஸ்டுகளுடன், நிறைய `ஐ.பி.எஸ்’கள், கொஞ்சம் `ஐ.ஏ.எஸ்’கள் என அரசின் உயரதிகாரிகளும் உறுப்பினர்களாக இருக்கும் `நண்பேண்டா’ வாட்ஸ் அப் குழுவின் `நண்பர்கள் சந்திப்பு.’ கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு சந்திக்காத இந்தக் குழுவினர், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம் கூடினர். விருந்து, இசை, நடனம் முதலான கேளிக்கைகளுடன் அதகளப்பட்ட அந்த இரவின் சில ஹைலைட்ஸ்...
“பத்து வருஷமா நான் லாக்டெளன்லதான் இருக்கேன்!” - நெகிழ்ந்த வடிவேலு

டிரஸ் கோடு வெள்ளைச் சட்டை, புளூ ஜீன்ஸ். மாநகரக் காவல்துறை அதிகாரிகள் பலரும் குழுவில் இருப்பதாலோ என்னவோ, (வாட்ஸ் அப் குழுவின் அட்மின் ஒரு உதவி ஆணையர் என்கிறார்கள்) டிரஸ் கோடு அப்படியே கடைப்பிடிக்கப்பட்டதென்றே சொல்லலாம். ஒருசிலரை மட்டுமே கலர் உடையில் பார்க்க முடிந்தது. இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ஆர்.வி. உதயகுமார், கங்கை அமரன், சந்தான பாரதி, மனோபாலா, சித்ரா லட்சுமணன், வெங்கட்பிரபு, நடிகர்கள் ராஜேஷ், வடிவேலு, விமல், சாந்தனு, பிரேம்ஜி, ரஞ்சித், பிரேம், `மாஸ்டர்’ மகேந்திரன், அம்பானி சங்கர், ஆனந்த ராஜ், ‘மைக்' மோகன், ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் சேவியோ பிரிட்டோ, ஆர்த்தி, கணேஷ்கர், பாடகி மாலதி எனக் கலந்து கொண்டவர்களின் பட்டியல் ரொம்பவே பெரியது.

“பத்து வருஷமா நான் லாக்டெளன்லதான் இருக்கேன்!” - நெகிழ்ந்த வடிவேலு

ஆர்ட்டிஸ்டுகள் தவிர்த்து குழுவில் இயங்கி வரும் அதிகாரிகள் தரப்பிலிருந்தும் பலர் கலந்துகொண்டனர். ஆனால் இவர்கள் குரூப் போட்டோ முதலான ஃபார்மாலிட்டிகளில் முகம் காட்டுவதில்லையாம். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மலேஷியத் துணைத்தூதர், பிரபல ஜோதிடர் ஷெல்வீ, கோவை `லாட்டரி’ மார்ட்டின் ஆகியோரையும் கூட்டத்தில் பார்க்க முடிந்தது.

“பத்து வருஷமா நான் லாக்டெளன்லதான் இருக்கேன்!” - நெகிழ்ந்த வடிவேலு
“பத்து வருஷமா நான் லாக்டெளன்லதான் இருக்கேன்!” - நெகிழ்ந்த வடிவேலு

`மைக்’ மோகனைப் பார்த்ததும் கட்டிப்பிடித்து நீண்ட நேரம் அவருடன் அளவளாவியபடி இருந்த ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ சிறுவயதில் தீவிர மோகன் ரசிகராம். ‘‘காலேஜ் நாட்கள்ல நான் உங்க ஃபேன். நான் விஜய் கூட சேர்ந்து போட்டோ எடுத்துக்க ஆசைப்பட்டதில்லை. ஆனா உங்களுடன் எடுக்க விரும்பறேன்'’ என செல்ஃபி எடுத்துக்கொண்டார்.மோகனுக்குக் குரல் கொடுத்த சுரேந்தர், பிரிட்டோ இருவரும் விஜயின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“பத்து வருஷமா நான் லாக்டெளன்லதான் இருக்கேன்!” - நெகிழ்ந்த வடிவேலு
“பத்து வருஷமா நான் லாக்டெளன்லதான் இருக்கேன்!” - நெகிழ்ந்த வடிவேலு

நடிகர் ராஜேஷ் திருவல்லிக்கேணி கெல்லட் பள்ளியில் ஜோதிடர் ஷெல்வீக்கு ஏழாம் வகுப்பு பாடம் எடுத்தவராம். பல வருடம் கழித்துத் தன்னுடைய ஆசிரியரை ஷெல்வீ சந்தித்த அந்தத் தருணம் இருவருக்குமே நெகிழ்ச்சியானதாக இருந்திருக்குமென்பதில் சந்தேகமில்லை. ‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி’ என்கிறார் ஷெல்வீ.

“பத்து வருஷமா நான் லாக்டெளன்லதான் இருக்கேன்!” - நெகிழ்ந்த வடிவேலு
“பத்து வருஷமா நான் லாக்டெளன்லதான் இருக்கேன்!” - நெகிழ்ந்த வடிவேலு

சென்ற முறை இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட சிலர் ஷூட்டிங்கில் இருந்ததால் இந்த முறை கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள்.

“பத்து வருஷமா நான் லாக்டெளன்லதான் இருக்கேன்!” - நெகிழ்ந்த வடிவேலு

நீண்ட நாள்களுக்குப் பிறகு சினிமாக்காரர்கள் அதிகம் கூடும் இடத்தில் வடிவேலுவைப் பார்க்க முடிந்ததே அதிசயம்தான். ஆள் கொஞ்சம் மெலிந்து காணப்பட்டார். நிகழ்ச்சியில் இவரது பேச்சுதான் ஹைலைட். மைக் பிடித்து சில எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடியவர், ஒருகட்டத்தில் `உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற `கர்ணன்’ படப் பாடலைப் பாடிய போது, ‘வஞ்சத்தில் வீழ்ந்தேனடா’ என்றபோது, கலங்கியபடி சில நிமிடங்கள் பாடுவதை நிறுத்தி விட்டார். அவர் கலங்கியதைக் கண்டு, மற்றவர்களும் கலங்க, சுதாரித்துக்கொண்டு, 'உங்களுக்கெல்லாம் ஒரு வருஷம்தான் லாக்டௌன்; நான் பத்து வருஷமாவே லாக் டௌன்லதானே இருக்கேன்’ என அந்த நிமிடத்திலும் சிரிக்க வைக்க முயன்றது மனதைத் தொடுவதாக இருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு