Published:Updated:

``தெலுங்கு திரையுலகம் குறிப்பிட்ட குடும்பங்களின் பிடியில் இருப்பதை உணர்ந்தேன்"- நடிகை அமலா பால்

அமலா பால்

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல கதாநாயகியாக வலம் வரும் அமலாபால் தெலுங்கில் 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது தெலுங்கு சினிமாவை விட்டு விலகியிருக்கும் அமலா பாலிடம் தெலுங்குத் திரையுலகம் குறித்துக் கேட்டனர்.

``தெலுங்கு திரையுலகம் குறிப்பிட்ட குடும்பங்களின் பிடியில் இருப்பதை உணர்ந்தேன்"- நடிகை அமலா பால்

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல கதாநாயகியாக வலம் வரும் அமலாபால் தெலுங்கில் 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது தெலுங்கு சினிமாவை விட்டு விலகியிருக்கும் அமலா பாலிடம் தெலுங்குத் திரையுலகம் குறித்துக் கேட்டனர்.

Published:Updated:
அமலா பால்
2009-ம் ஆண்டு 'நீல தம்ரா' என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். இத்திரைப்படத்தினை தொடர்ந்து தமிழில் சிந்து சமவெளி என்ற படம் மூலம் அறிமுகமான அமலா பாலிற்கு 2010-ம் ஆண்டு, அவர் நடிப்பில் வெளிவந்த `மைனா' திரைப்படம் சிறந்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல கதாநாயகியாக வலம் வரும் அமலாபால் தெலுங்கில் 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது தெலுங்கு சினிமாவை விட்டு விலகியிருக்கும் அமலா பாலிடம் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்காததற்குக் காரணம் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அமலா பால், “நான் தெலுங்கில் நடிக்க வந்தபோது, ​​தெலுங்கு திரையுலகம் குறிப்பிட்ட குடும்பங்களின் பிடியில் இருப்பதை உணர்ந்தேன்.

அமலா பால்
அமலா பால்

அந்த குடும்ப நடிகர்களும் அவர்களது ரசிகர்களுமே தெலுங்கு திரையுலகில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நான் தெலுங்கில் நடித்தபோது படங்கள் வித்தியாசமாக இருந்தன. ஒவ்வொரு படத்திலும் இரண்டு கதாநாயகிகள் இருப்பார்கள். கதாநாயகியை வெறும் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். சில காதல் காட்சிகள் பாடல் காட்சிகளில் மட்டுமே கதாநாயகி வருவார். மற்ற திரைப்பகுதி முழுவதையும் ஹீரோ தான் ஆக்கிரமித்து இருப்பார். அதுமட்டுமின்றி முழு கமர்சியல் படங்களை மட்டுமே அவர்கள் எடுபார்கள். அதனால் தெலுங்கு சினிமாவில் என்னால் நீடிக்க முடியவில்லை என்றும், அதே சமயம் தமிழ் சினிமாவில் நடிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. மைனா படம் எனக்கு அனைவரது மத்தியிலும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அப்படத்திற்கு பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன. பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது என்றும் கூறியுள்ளார்.