Published:Updated:

“நம்புங்க... எங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை!”

நட்சத்திராவின் காதல் முதல் கல்யாணம் வரை

பிரீமியம் ஸ்டோரி

சின்னத்திரை பிரபலம் நட்சத்திரா வீட்டில் சீக்கிரமே கெட்டிமேளம் கொட்டப்போகிறது. தன் பள்ளிக்கால நண்பர் ராகவை கரம்பிடிப்ப வருக்கு, கடந்த ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில், ஸ்டார் விஜய் சேனலில் ஒளிபரப்பாகும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் மூலம் தமிழ்க் குடும்பங்களில் செல்ல மகளாக இடம் பிடித் திருக்கும் நட்சத்திராவின் முகம் கல்யாணக்க ளையில் பூரிக்கிறது. அவருடனான சந்திப்பில், தனது பர்சனல் பக்கங்கள் குறித்து கலகலப் பாகப் பகிர்ந்துகொண்டார்.

“நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு கல்யாணம் முடிவாகியிருந்த நேரத்துல ரெண்டாவது லாக்டெளன் வந்துருச்சு. கோவிட் சூழலால தான் கல்யாண தேதி தள்ளிப்போய்கிட்டே இருக்கு. எங்க ரெண்டு பேரோட குடும்பத்துல யும் சரியான நேரத்துல கல்யாணத்தை நடத்திடலாம்னு காத்திருக்காங்க. கூடிய சீக்கிரமே அதுக்கான வாய்ப்பு கைகூடும். இதுக்கிடைப்பட்ட காலத்துல அவரும் நானும் அடிக்கடி வெளியிடங்களுக்குப் போய் செலிபிரேட் பண்றோம். நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்குற படங்களை என்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல ஷேர் பண்ணுவேன். அதனால, பலரும் எங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சு, இந்த வருஷம் நாங்க தலைதீபாவளி கொண்டாடினதா நினைச்சு கிட்டிருக்காங்க. அடுத்த வருஷம் நிச்சயமா நாங்க தலைதீபாவளி கொண்டாடுவோம்.

போன்லயும், அவுட்டிங் போறப்போ நேர்லயும் பலரும் எங்களுக்கு வாழ்த்து மழை பொழியுறாங்க. இதெல்லாம் பாசிட்டிவ் ஃபீலிங்கை கொடுக்குது. நாங்க ரெண்டு பேருமே வொர்க்கஹாலிக் நபர்கள். அதேசமயம், லஞ்ச் பிரேக், டிராவல்னு கிடைக்குற ஓய்வு நேரத்துல அரட்டையடிப் போம். அவருக்கு நேரம் கிடைச்சா, என்னை ஷூட்டிங் ஸ்பாட்ல பிக்கப், டிராப் பண்ணுவார். தியேட்டருக்குப் போய் படம் பார்க்குறதும் ரெஸ்டாரன்ட் போறதும் எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிச்ச விஷயங்கள். கல்யாணத்துக்குப் பிறகு அடிக்கடி ஃபிளைட்ல வெளிநாடுகளுக்குப் பறக்கவும், ஊர் சுத்தவும் ஆவலா காத்திட்டி ருக்கோம்” என்பவரின் முகத்தில் வெட்கப் புன்னகை.

ஃபேஷன் விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்ட நட்சத்திரா, இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களில் அவருடைய காஸ்டியூம் விஷயங்களைக் கவனித்து, கமென்ட்ஸ் தட்டிவிடுவதற்கே ரசிகர் கூட்டம் ஆவலுடன் காத்திருக்கிறது. அதுகுறித்துப் பேசுபவருக்கு, புடவைதான் பிடித்தமான உடையாம்.

“நம்புங்க... எங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை!”

“ஒருசில நிகழ்ச்சிகளைத் தவிர, மத்த எல்லா நிகழ்ச்சி, ஷூட்டிங்லயும் எனக்கான டிரஸ்ஸை என் செலவுல நானேதான் வாங்கிப் பயன்படுத்துவேன். அதனால, ஒவ்வொருநாள் ஷூட்டிங் தேவைக்கான டிரஸ், காஸ்டியூம் வாங்க அடிக்கடி நான் ஷாப்பிங் போவேன். சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகுதான், பணத் தோட அருமை தெரிஞ்சு, ஆடம்பரத்துக்காக எதையும் வாங்காம, அவசியத்தேவைக்கு ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சேன். எனக்குன்னா சீக்கிரமாவே ஷாப்பிங் பண்ணிடுவேன். ராகவுக்கான ஒவ்வொரு பொருளையும் செலக்ட் பண்றதுக்குத்தான் ரொம்ப நேரம் எடுத்துப்பேன். இப்போ கல்யாணம் நெருங்கி ட்டிருக்குறதால அதுக்கான ஷாப்பிங் வேலைகள் வீட்டுல ஜோரா நடக்குது.”

எப்பவுமே பாசிட்டிவ்வா, புன்னகையோடு இருக்குற குணம் பத்தி...

``மீடியாக்குள்ள நுழைஞ்ச புதுசுல, ஒரு சேனல்ல டான்ஸ் ரியாலிட்டி ஷோவுல போட்டியாளரா கலந்துகிட்டேன். அதுல அடிக்கடி எனக்கு நெகட்டிவ்வான கமென்ட்ஸ் சொல்வாங்க. அதையெல்லாம் நான் பெரிசா எடுத்துக்காம சிரிச்சுகிட்டே இருப்பேன். ஒருமுறை கடுப்பான நடுவர் ஒருத்தர் என்னைத் திட்டினார். ‘நீங்க சொன்னதை மதிக்காம நான் சிரிக்கல. டிவி-யில என் முகத்தைப் பார்க்குற மக்களுக்கு நான் சிரிச்ச முகமா இருக்கணும்னுதான் அப்படி ரியாக்ட் பண்ணினேன்’னு சொல்லி, அந்த ஸ்கூல் டேஸ்லயே ஆன் ஸ்கிரீனுக்கு ஏத்த மாதிரி என்னைத் தயார்படுத்திகிட்டேன்.

நமக்குள்ள என்ன கவலைகள் வேணாலும் இருக்கலாம். ஆனா, ஆன் ஸ்கிரீன்ல நம்மள பார்க்குற மக்களுக்கு முடிஞ்சவரைக்கும் நம்ம புன்னகையால பாசிட்டிவிட்டியைப் பரப்பணும். அதேபோல, கேலிகிண்டல் பண்றதோ, சிரிக்க வைக்கிறோம்னு இன்னொருத்தரை பொதுவெளியில காயப் படுத்துறதோ, உருவகேலி பண்றதோ எனக்கு சுத்தமா பிடிக்காது. தொகுப்பாளரா என் நிகழ்ச்சியில அதையெல்லாம் எப்போதும் நான் செய்யவே மாட்டேன்.''

ஷூட்டிங் இல்லாத நாள்கள் எப்படியிருக்கும்?

``ஷூட்டிங் நாள்கள்ல அதிகபட்சமா அஞ்சு மணி நேரம்தான் தூங்க முடியும். தூக்கம் குறைஞ்சாலே உடல் சோர்வாகும். அதனால, ஷூட்டிங் இல்லாத ஓய்வு நாள் கள்ல நேரங் காலம் பார்க்காம நல்லா தூங்கு வேன். சமைக்குறது, அன்பா பரிமாறுவது, கிச்சன் மற்றும் டைனிங் டேபிளை சுத்தம் பண்ணி ஒழுங்கு படுத்துறதுனு வீட்டு வேலைகளை ஆர்வமா செய்வேன். அதனால, கல்யாணத்துக்கப்புறம் புகுந்த வீட்டுல எல்லோருடைய மனசுலயும் சீக்கிரமே இடம் பிடிச்சுடுவேன்னு நினைக்குறேன்.''

உங்களைப் பத்தின வதந்திகள்ல நீங்களே ரொம்ப ரசிச்சது...

``கோவிட் நேரத்துல நான் இறந்துட்டதா ஒரு யூடியூப் சேனல்ல செய்தி வெளியாச்சு. புகார் கொடுத்து அந்தச் செய்தியை நீக்கச் சொல்லுன்னு சிலர் என்கிட்ட சொன்னாங்க. நான் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு. அதனால, ஒண்ணுத்துக்கும் உதவாத அந்த விஷயத்தைப் பத்தி யோசிக்காம, சிரிச்சுட்டு கடந்து போயிட்டேன்.''

ஃபியூச்சர் பிளான்ஸ்...

``ஆங்கர் வேலைதான் எனக்கான ஆக்டிங் வாய்ப்புக்கு விசிட்டிங் கார்டா அமைஞ்சது. சீரியல் தாண்டி, சில படங்கள்லயும் நடிச்சிருக் கேன். நல்ல பட வாய்ப்புகளுக்காகக் காத்திட் டிருக்கேன். மத்தபடி, வீக் எண்டுல அவுட்டிங் போகணும்; பிடிச்ச உணவைச் சாப்பிட ணும்ங்கிறதுதான் என்னோட அதிகபட்ச ஆசைகளாவும் எதிர்பார்ப்புகளாவும் இருக்கும்.''

இதுவரை ஷேர் பண்ணாத ஒரு சீக்ரெட்...

``குழந்தையா இருந்தப்போ வெளியிடத்துல நான் காணாமல் போய் கண்டுபிடிக்கப் பட்டேன். அப்பலேருந்து கூட்டம்னாலே எனக்கு பயம். பெரிய அரங்கத்துல எத்தனை பேர் இருந்தாலும் பயப்பட மாட்டேன். ஆனா, க்ளோஸ்டு ரூம்ல சிலர் இருந்தாகூட பயமும் படபடப்பும் வந்துடும். அதனாலேயே, கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்குப் போறப்போ என் மனசுக்குள்ள ஏற்படும் பயத்தை வெளிக்காட்டிக்காம இருக்க மெனக்கெடுவேன். இந்தச் சிக்கல்லேருந்து விடுபட முயற்சி பண்ணிட்டிருக்கேன்.”

வாழ்த்துகள் கல்யாணப் பெண்ணே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு