Published:Updated:

``அவர் தற்போது உயிரோடு இல்லை!" - கொரோனாவால் தன் சகோதரரை இழந்த நடிகை பியா

``என் சகோதரர் இறந்துகொண்டிருக்கிறார். யாராவது உதவி செய்யுங்களேன் ப்ளீஸ்’’ என்று கிட்டத்தட்ட 10 தடவை ட்வீட் செய்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வாழ்க்கை எவ்வளவு நிச்சயமற்றது என்பதை கொரோனா வைரஸ் நமக்கெல்லாம் தினம் தினம் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது. அது சாமானியனோ, பிரபலமோ, ஒரு சில நாள்களுக்கு முன்னாள் `அய்யோ, அவரு கோவிட் பாசிட்டிவ்வால இறந்துட்டாரா’ என்று பதறியவர்கள் அடுத்த சில நாள்களில் கொரோனா வைரஸ்க்கு தங்களுடைய உயிரைப் பறிகொடுக்கிறார்கள்.

திமுக சட்டமன்றக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்! #NowAtVikatan

இப்படித்தான், நான்கு நாள்களுக்கு முன்னாள், `ஓ... மை காட். கே.வி.ஆனந்த் சார் இறந்துட்டாரா? என்னால நம்பவே முடியலை. யாராவது இது உண்மையான செய்தி அல்ல. வதந்தி என்று சொல்லுங்களேன்’ என்று `கோ’ படத்தில் நடித்த நடிகை பியா பாஜ்பாய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதறியிருந்தார். அதே பியா பாஜ்பாய், இதோ சில மணி நேரத்துக்கு முன்னால் தன்னுடைய ட்விட்டரில் `மை பிரதர் ஈஸ் நோ மோர்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

நடிகை பியா கடந்த சில மணி நேரங்களாக, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``என் சகோதரர் இறந்துகொண்டிருக்கிறார். அவருக்கு மருத்துவமனையில் ஒரு படுக்கையும் வென்டிலேட்டர் உதவியும் தேவை. நாங்கள் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிற ஃபருகாபாத் நகரத்தில் காயம்கன்ஜ் பிளாக்கில் வசித்து வருகிறோம். நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறோம். யாராவது உதவி செய்யுங்களேன் ப்ளீஸ்’’ என்று கிட்டத்தட்ட 10 தடவை ட்வீட் செய்திருக்கிறார்.

Pia Bajpiee
Pia Bajpiee
Twitter Image

இதோ, இன்று பியாவின் சகோதரர் உயிருடன் இல்லை. அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த நிமிடம் ஆயிரக்கணக்கானோர் பியாவுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை பேர் ஆறுதல் சொன்னாலும், அவர் சகோதரனைக் காப்பாற்றச் செய்யப்பட்டிருக்க வேண்டிய ஓர் உதவிக்கு ஈடாகாது என்பது மட்டுமே உண்மை.

இருந்தாலும் எங்களுடைய ஆறுதல்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள் பியா பாஜ்பாய்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு