Published:Updated:

``பிரியங்கா சோப்ராவுக்கு விவாகரத்தா?" - தாயார் மது சோப்ரா பதில்!

நடிகை பிரியங்கா சோப்ரா தனது பெயரில் இருந்து தனது கணவரின் பெயரை நீக்கியிருக்கிறார். இதனால் அவர் விவாகரத்து செய்யப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். டிவி நிகழ்ச்சிகளிலும் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். பாலிவுட் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ளார். எப்போதும் கணவருடன் நெருக்கமாக இருக்கும் பிரியங்கா சோப்ரா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்கு அருகில் இருந்த தனது கணவரின் பெயரை அகற்றி அனைவருக்கும் புதிய சந்தேகத்தை உண்டாக்கி இருக்கிறார். இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தனது பெயரை பிரியங்கா சோப்ரா ஜோனஸ் என்று குறிப்பிட்டு வந்தார். திடீரென சோப்ரா மற்றும் ஜோனஸ் ஆகிய இரண்டு பெயர்களையும் அகற்றிவிட்டு வெறுமனே பிரியங்கா என்று மட்டும் குறிப்பிட்டுள்ளதுதான் அனைவருக்கும் சந்தேகத்தை உண்டாக்கி இருக்கிறது. இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா ஜோடி சமீபத்தில் தீபாவளியை இணைந்து கொண்டாடி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அதோடு புதிதாக இருவரும் சேர்ந்து புதிய வீடு ஒன்றையும் வாங்கி இருக்கின்றனர்.

பிரியங்கா-நிக்
பிரியங்கா-நிக்

அதற்குள் புதிதாக விவாகரத்து வதந்தி பரவி இருப்பது பிரியங்கா சோப்ராவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் பிரியங்கா சோப்ரா தரப்பில் கணவரின் பெயர் அகற்றப்பட்டதற்கு விளக்கம் கொடுக்கப்படவில்லை. அவரது பதிலை அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர. இந்தச் சூழலில் இது குறித்து பிரியங்கா சோப்ராவின் நண்பர் ஒருவர் கூறுகையில், `` பிரியங்கா சோப்ராவின் விவாகரத்து தொடர்பான செய்திகள் வேடிக்கையானது. பிரியங்கா தனது எதிர்கால திட்டத்திற்கு தனது முதல் பெயரை மட்டும் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். ஜோன்ஸ் பெயர் மட்டுமல்லாது சோப்ரா என்ற பெயரையும் பிரியங்கா நீக்கி இருக்கிறார் என்று தெரிவித்தார். பிரியங்கா சோப்ராவின் தாயார் மது சோப்ராவின் விவாகரத்து செய்தியை மறுத்துள்ளார். ``இது போன்ற வதந்தியை பரப்பாதீர்கள்!" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு