Published:Updated:

` குழந்தைகள் மகிழ்ச்சியுடன் தூங்க வேண்டும்' புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் திரைக்கலைஞர் ரோகினி!

திரைக்கலைஞர் ரோகினி

ஓங்கில் கூட்டம் என்கிற அமைப்பு வழியாக பதின் பருவத்து குழந்தைகளுக்கான நூல்களை தயாரித்து வெளியிடுகிற ஒரு அமைப்பாக இருக்கிறது.

` குழந்தைகள் மகிழ்ச்சியுடன் தூங்க வேண்டும்' புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் திரைக்கலைஞர் ரோகினி!

ஓங்கில் கூட்டம் என்கிற அமைப்பு வழியாக பதின் பருவத்து குழந்தைகளுக்கான நூல்களை தயாரித்து வெளியிடுகிற ஒரு அமைப்பாக இருக்கிறது.

Published:Updated:
திரைக்கலைஞர் ரோகினி
ஓங்கில் கூட்டம் என்னும் அமைப்பு பதின் பருவத்து குழந்தைகளுக்கான நூல்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. அவர்கள் தினந்தினம் எதிர்க்கொள்கிற கேள்விகள், அவர்களுக்கு ஏற்படுகிற பிரச்னைகள் ஆகியவற்றிற்கு உதவிடும் விதமாக மிகக் குறைந்த பக்கங்களில், குறைந்த விலையில் இந்த புத்தகங்களை ஓங்கில் கூட்டமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிடுகிறார்கள்.

அமைதியாக இருக்கும் நீரில் ஒரு சிறு தூறலே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றத்தை ஏற்படுத்த ஓங்கில் கூட்டம் எடுத்து வைத்த முதல் படி தான் இளையோருக்கான புத்தக வெளியிட்டு விழா. 30.10.22 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற இவ்விழாவில் எழுத்தாளர்கள், சிறார்கள், வாசகர்கள் என்ன பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்த திரைக்கலைஞர் ரோகினி. 'வாசிக்காத புத்தகத்தின் வாசனை' 'ஓரிகாமி' 'கயிறு' 'கடைசி பெஞ்ச்' 'சோசோவின் விசித்திர வாழ்க்கை' 'சாலிம் அலி' 'ஜானகி அம்மாள் - இந்தியாவின் கரும்பு பெண்மணி' 'தண்ணீர் என்று ஒரு அமுதம்' 'பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்' 'ஹாம்ஹோல்' 'சார்லஸ் டார்வின்' ஆகிய பதினோரு புத்தகங்கள் அன்றைய தினத்தில் வெளியிடப்பட்டது.

ஓங்கில் கூட்டம்; புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட குழந்தைககள்
ஓங்கில் கூட்டம்; புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட குழந்தைககள்

நிகழ்ச்சியில் பேசிய ரோஹிணி " குழந்தைகளிடம், `படி! படி!' என்று கூறினால் உங்கள் வார்த்தைக்காக படிப்பார்களே தவிர அவர்களுக்கு புத்தகங்களின் மீது ஆர்வம் வராது. அவர்களுக்கு ஆர்வம் வர என்ன செய்ய அவர்கள் கண்களில் படும் வகையில் நல்ல புத்தகங்களை வைக்க வேண்டும். ஆர்வம் இல்லையென்றாலும் சும்மாவாவது எடுத்துப் பார்ப்பார்கள் அதை பார்க்கும் போது அவர்களுக்கே ஆர்வத்தை தூண்டுகிற அளவிலான புத்தகங்ளை அறிமுகப்படுத்த வேண்டும்.

திரைக்கலைஞர் ரோகினி
திரைக்கலைஞர் ரோகினி

நேரம் செலவிட்டு அவர்களுடன் உரையாட வேண்டும். பகலில் எவ்வளவு கண்டிப்பாக நடந்து கொண்டாலும் இரவில் அவர்கள் உறங்கச் செல்வதற்கு முன்பு நகைச்சுவை கதைகள் கூறி அவர்களை சிரிக்க வைத்து உறங்க வைத்தால் எல்லா கஷ்டத்தையும் மறந்து  அவர்கள் மகிழ்ச்சியான குழந்தையாக வளர்வார்கள் என்று மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள்." என்றார்.