Published:Updated:

Samantha: `வதந்தி வேண்டாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை'- சமந்தா தரப்பு விளக்கம்

Samantha

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவிய நிலையில் சமந்தாவின் செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.

Samantha: `வதந்தி வேண்டாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை'- சமந்தா தரப்பு விளக்கம்

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவிய நிலையில் சமந்தாவின் செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.

Published:Updated:
Samantha
நடிகை சமந்தாவின் உடல்நிலை திடீரென்று மோசமடைந்து ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகின.

ஆனால் அது வதந்தி என்று சமந்தாவின் செய்தித்தொடர்பாளர்  தற்போது தெரிவித்திருக்கிறார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. சமந்தாவின் உடல்நிலை நன்றாகத் தான்  உள்ளது. அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் தனது உடல்நலப் பிரச்னை குறித்து முதன்முறையாக வெளிப்படையாகப் பகிர்ந்திருந்தார். அப்பதிவில் “'யசோதா' டிரெய்லருக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு அமோகமாக இருந்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் உறவும்தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது.

சமந்தா
சமந்தா

தற்போது எனக்கு Myositis எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு இருகிறது என்று தெரிவித்திருந்தார். சமந்தாவின் இந்த பதிவிற்கு பின் பல்வேறு வதந்திகள் பரவின. அதனால்  சமந்தா தனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுவதைப் பற்றி எமோஷனலாகவும் பேசியிருந்தார். தனது உயிர் ஆபத்தான நிலையில் இல்லை என்றும், தனது உடல்நிலை குறித்த மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை ஊடகங்கள் தவிர்த்திருக்க வேண்டும்" என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.