Published:Updated:

“வாலு விக்ரம்... சின்சியர் துருவ்!”

சிம்ரன்
பிரீமியம் ஸ்டோரி
சிம்ரன்

பல வருஷங்களுக்குப் பிறகு பிரசாந்த்கூட நடிச்சேன். ரொம்ப சவாலான கேரக்டர். தபு பண்ணுன கேரக்டர்ல தமிழ்ல நடிச்சிருக்கேன்.

“வாலு விக்ரம்... சின்சியர் துருவ்!”

பல வருஷங்களுக்குப் பிறகு பிரசாந்த்கூட நடிச்சேன். ரொம்ப சவாலான கேரக்டர். தபு பண்ணுன கேரக்டர்ல தமிழ்ல நடிச்சிருக்கேன்.

Published:Updated:
சிம்ரன்
பிரீமியம் ஸ்டோரி
சிம்ரன்

``ரொம்ப பிஸியா போயிட்டிருக்கு. வீட்டுல ரெண்டு பசங்க இருக்காங்க. பெரியவன் பிளஸ் ஒன் படிக்கிறான். சின்னவன் அஞ்சாவது. ரெண்டு பேருக்கும் ஸ்கூல் ஆரம்பிச்சிருச்சு. ஒரு பொறுப்பான அம்மாவா இருக்கேன். என்னோட எதிர்காலம் இவங்கதான்'' தாய்மை மிளிர ஆரம்பிக்கிறார், மீண்டும் தமிழில் ‘கம் பேக்’ கொடுத்திருக்கும் சிம்ரன்.

சினிமா செகண்ட் இன்னிங்ஸ் எப்படியிருக்கு?

``என்னைப் பொறுத்தவரைக்கும் செகண்ட் இன்னிங்ஸ், தேர்டு இன்னிங்ஸ்னு எதுவும் பாக்குறது இல்ல. தமிழ் சினிமாவுக்கு வந்து 25 வருஷம் ஆச்சு. இத்தனை வருடம் போனதை நம்பவே முடியல. இப்பதான் நடிக்க வந்த மாதிரியே இருக்கு. இதுக்குள்ள சினிமா, கல்யாணம், குழந்தைகள்னு ஓடிருச்சு. இடையில் சின்னத்திரையில் வேலை பார்த்தேன். கொஞ்சம் இடைவெளி விழுந்திருச்சு. `துருவ நட்சத்திரம்', `பேட்ட', `மகான்' என்று இப்போ பிஸியாகிட்டேன். எல்லாம் நல்லா போயிட்டிருக்கு.''

“வாலு விக்ரம்... சின்சியர் துருவ்!”

விக்ரம், துருவ் கூட நடிச்ச `மகான்' அனுபவம்?

``இந்தப் படம் சூப்பர் அனுபவத்தைக் கொடுத்துச்சு. கார்த்திக் சுப்புராஜ்கூட எனக்கு இரண்டாவது படம். ட்ரெண்ட் செட்டர், ஸ்டைலிஷ் டைரக்டர் கார்த்திக். `பேட்ட' படம் முடிச்சவுடனே, `இன்னும் நிறைய படங்கள் சேர்ந்து வேலை செய்யணும்'னு சொன்னேன். `கண்டிப்பாக மேடம்'னு சொன்னார். போன வருடம் கார்த்திக் சுப்புராஜ் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. முழுக் கதையையும் கார்த்திக் சொன்னார். பிடிச்சிருந்தது. இந்த மாதிரியான திரைக்கதை எழுதுவது கஷ்டம். எல்லோருக்கும் படம் பிடிச்சிருக்கு. விக்ரம், துருவ், சிம்ஹா காம்பினேஷன்ல படம் நடிக்க வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். எப்போதும் ஷூட்டிங்ல துருவ் அமைதியாக இருப்பார். எங்கேயாவது நின்னுட்டு டயலாக்ஸ் படிச்சிக்கிட்டு இருப்பார். Promising young star துருவ். ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ரிகர்சல் பண்ணிக்கிட்டே இருப்பார். அவரது அர்ப்பணிப்பு பார்த்து ஆச்சரியமா இருந்தது. கேமரா முன்னாடி நடிக்கத் தயக்கம் காட்டுவதில்ல. துருவ், விக்ரம் நடிப்பில் போட்டி இருக்கும். விக்ரம் நடிக்கிறப்போ கட் சொல்லவே தோணாது. வாலுத்தனமும் அதிகமா விக்ரம் கிட்ட இருக்கும். எப்போதும் பிரண்டா ட்ரீட் பண்ணுவார். அப்பா, பையன் ரெண்டு பேர் கூடவும் சேர்ந்து நடிச்சது மனசுக்கு நெருக்கமாக இருந்தது.”

`அந்தாதுன்' தமிழ் ரீமேக்கில் நடிச்சுக்கிட்டிருக்கீங்களே?

``பல வருஷங்களுக்குப் பிறகு பிரசாந்த்கூட நடிச்சேன். ரொம்ப சவாலான கேரக்டர். தபு பண்ணுன கேரக்டர்ல தமிழ்ல நடிச்சிருக்கேன். படம் முழுக்க வரக்கூடிய கேரக்டர். ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. ரப் காப்பி பார்த்தேன். சீக்கிரம் ரிலீஸ் ஆகும்.''

“வாலு விக்ரம்... சின்சியர் துருவ்!”

இப்போ இருக்குற ஹீரோயின்ஸ்ல யாருடைய டான்ஸ் பிடிச்சிருக்கு?

``எல்லாரும் நல்லா பண்றாங்க. இப்போ போட்டி நிறைய இருக்கு. தன்னால முடிஞ்ச அளவுக்கு பெஸ்ட் கொடுக்குறாங்க. `புஷ்பா' படத்தில் ராஷ்மிகா நல்லா ஆடியிருந்தார்.’’

எஸ்.ஜே.சூர்யாவின் முதல் ஹீரோயின், அவரது ஹீரோ அவதாரத்தை எப்படிப் பார்க்குறீங்க?

``தொலைநோக்குப் பார்வையோட சூர்யா படம் கொடுப்பார். பத்து வருஷத்துக்கு அப்புறம் நடக்கவிருக்கிறதை இப்போதே படத்துல கொடுக்கக் கூடிய டைரக்டர். அவர் நடிகரானது நல்ல முடிவு. இருந்தும், அவர் ஒரு படம் டைரக்‌ஷன் பண்ணணும். அதைப் பார்க்க ஆசையா இருக்கேன். ஆர்ட்டிஸ்ட்கிட்ட கதை சொல்றப்போ நடிச்சுக் காட்டிதான் சொல்லுவார் சூர்யா. இந்த அளவுக்கு நடிப்பு சூர்யாவுக்குப் பிடிக்கும். ஹீரோ, வில்லன் எதுவாக இருந்தாலும் நல்லா நடிக்கிறார். சீக்கிரமே டைரக்‌ஷன் பண்ணணும் எஸ்.ஜே.சூர்யா.”

“வாலு விக்ரம்... சின்சியர் துருவ்!”

எந்தப் படமாவது மிஸ் பண்ணிட்டோம்னு நினைக்குறது உண்டா?

“எப்போதும் வருத்தப்பட்டது இல்ல. If it's yours it will return to you. and if it doesn't its not your's. `மகான்' படத்துல வர்ற டயலாக்ஸ் மாதிரி. எனக்கானது எனக்குக் கிடைச்சிருக்கு. ரொம்ப திருப்தியா நடிச்சிருக்கேன். மன அமைதியோட இருக்கேன்.”

பல வருஷங்களுக்குப் பிறகு மாதவன்கூட சேர்ந்து நடிக்கும் `ராக்கெட்ரி' படம்?

`` `கன்னத்தில் முத்தமிட்டால்' படத்துக்குப் பிறகு சேர்ந்து நடிக்குறேன். `விக்ரம் வேதா' நேரத்துல மாதவனைப் பார்த்தேன். அதுக்கு அப்புறம் ஒருநாள் மாதவன் கிட்ட இருந்து போன் வந்தது. இவரோட டைரக்‌ஷன்ல நடிச்சது சந்தோஷமா இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்ல ஸ்ட்ரிக்ட்டா இருந்தார். ரொம்ப கிளியரா இருந்தார். திரைக்கதையை நல்லா வடிவமைச்சிருக்கார் மாதவன். முழுப்படமும் முடிச்சாச்சு. இந்த வருஷம் ரிலீஸ் ஆகும். VFX வேலைகள் நடந்துகிட்டிருக்கு”

அதே புன்னகை... அதே உற்சாகம்... அதே சிம்ரன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism