Published:Updated:

`ஒரு நடிகை ஏன் தன் சம்பளத்தை உயர்த்தக்கூடாது?' - கரீனாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் டாப்ஸி

டாப்ஸி
டாப்ஸி

`சீதா’ படத்தில் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ள கரீனாவை சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். இப்போது அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார் டாப்ஸி பன்னு.

சீதா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அதிக சம்பளம் கேட்டதற்காக கரீனா கபூரை சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்யும் நபர்கள் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார் நடிகை டாப்ஸி பன்னு.

வரவிருக்கும் `சீதா’ படத்தில் புராண கதாபாத்திரமான சீதாவாக நடிக்கவிருக்கிறார் கரீனா கபூர் கான். இந்தப் படத்துக்காக கரீனா கபூர் தனது சம்பளத்தை சுமார் ரூ. 6 கோடியிலிருந்து ரூ.12 கோடியாக உயர்த்தியதாக தகவல்கள் வருகின்றன. இந்தப் படம் சீதாவின் பார்வையில் ராமாயணத்தை மறுபரிசீலனை செய்வதாகக் கூறப்படுகிறது.

கரீனா கபூர்
கரீனா கபூர்
Instagram: Photo// @kareenakapoorkhan

இந்தப் படத்தில் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ள கரீனாவை சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். இப்போது அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார் டாப்ஸி பன்னு.

கரீனா ட்ரோல் செய்யப்படுகிற விவகாரம் குறித்து பேசிய டாப்ஸி, ``ஓர் ஆண் இந்தச் சம்பளத்தைக் கேட்டிருந்தால், மக்கள், `அவருடைய சந்தை மதிப்பு அதிகம்’ என்று கொண்டாடியிருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு பெண் உயர்ந்த சம்பளம் கேட்பதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் மிக அதிகமாகக் கேட்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்; விதவிதமான வார்த்தைகளால் அந்தப் பெண் தாக்கப்படுகிறார்.

பெண்கள் சம்பள உயர்வு கேட்டாலே போதும்.; அதை ஒரு பிரச்னையாக்குவது வழக்கமாகிவிட்டது. ஆமாம்... ஏன் அவர் சம்பளத்தை உயர்த்தக்கூடாது? நம் நாட்டில் உள்ள மிகப்பெரிய பெண் சூப்பர்ஸ்டார்களில் ஒருவர் கரீனா. அவர் தனது உழைப்புக்கும் நேரத்துக்கும் பொருத்தமான சம்பளத்தைக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? அது அவருடைய வேலை.

Taapsee
Taapsee
IT Raid: கணக்கில் வராத ரூ.650 கோடி; டாப்ஸி நக்கல் ட்வீட்; அனுராக் வைரல் புகைப்படம் - என்ன பிரச்னை?

இதற்கு முன் புராணக் கதாபாத்திரங்களில் நடித்த ஆண்கள் அவற்றை இலவசமாகவா செய்துகொடுத்தார்கள்?’’ என்று கேள்விகளை எழுப்பி, கரீனா கபூர் கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் டாப்ஸி.

கரீனா அடுத்து, அமீர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் `லால் சிங் சத்தா’ படத்தில் நடிக்கிறார். கரண் ஜோஹரின் பீரியட் படமான `தக்த்’திலும் கரீனா இருக்கிறார்.

- எஸ்.சங்கீதா

அடுத்த கட்டுரைக்கு