Published:Updated:

சினிமாவுக்காக சண்டை செய்வோம் வா!

AK Vs AK
பிரீமியம் ஸ்டோரி
AK Vs AK

ஆமா... இந்த ஐடியா லாக்டௌன்ல யோசிச்சதுன்னு சொன்னா நம்பிடுவீங்கதானே?

சினிமாவுக்காக சண்டை செய்வோம் வா!

ஆமா... இந்த ஐடியா லாக்டௌன்ல யோசிச்சதுன்னு சொன்னா நம்பிடுவீங்கதானே?

Published:Updated:
AK Vs AK
பிரீமியம் ஸ்டோரி
AK Vs AK

சமீபத்திய பாலிவுட் சென்சேஷன் AK Vs AK! ட்விட்டரில் 90களின் பாலிவுட் கனவுக்கண்ணன் அனில் கபூரின் நடிப்பை ஆஸ்கரோடு தொடர்பு படுத்தி பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கிண்டலடிக்க... சூடாகிய அனில் பதிலுக்கு அனுராக்கின் சினிமாவைக் கலாய்த்தார். ஒருகட்டத்தில் இருவரும் மாறிமாறி ட்விட்டரில் திட்டிக்கொள்ள... டிரெண்டானார்கள்.

------CUT---------

பாலிவுட் மேடை நிகழ்ச்சியொன்றில் ‘கபூர்னு பேரை மட்டும் வெச்சுக்கிட்டு நடிக்கத் தெரியாமலே சில பேரு இருக்காங்க!” என மேடையிலிருந்த அனில் கபூரை இயக்குநர் அனுராக் காஷ்யப் சீண்டுகிறார்.

சினிமாவுக்காக சண்டை செய்வோம் வா!

பதிலுக்கு ‘நீயெல்லாம் எடுக்குறதுக்குப் பேரு படமாடா?” என அனுராக்கை அனில் கோபமேற்ற... அனுராக் தண்ணீரை அனில் கபூர் முகத்தில் விசிறியடிக்கிறார். எல்லோரும் அதிர்ச்சியாக...

--------CUT----------

Trailer, Teaser, Twitter என மூன்று டி-களிலும் பாலிவுட்டின் சீனியர்களான அனுராக் காஷ்யப்-அனில் கபூர் சண்டையைப் பற்றி AK Vs AK என தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்க... கூலாக சிரித்துக்கொண்டே ‘இதுதான் என் அடுத்த படத்தோட டைட்டில்!’ எனச் சொன்னார் விக்ரமாதித்யா மோத்வானே. அனுராக் காஷ்யப்பின் முன்னாள் இணை இயக்குநர். இந்நாள் பிசினஸ் பார்ட்னர்! `Phantom Films’ எனத் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்து நடத்தினார்கள். நெட்ப்ளிக்ஸுக்காக சாக்ரெட் கேம்ஸை இருவரும் இயக்கி வரவேற்பைப் பெற்றார்கள். ‘உடான்’, ‘லூட்டேரா’, ‘ட்ராப்டு’, ‘பாவேஷ் ஜோஷி சூப்பர் ஹீரோ’ போன்ற படங்களின் இயக்குநர்தான் விக்ரமாதித்யா. அனுராக் காஷ்யப் யார் என உலகமே திரும்பிப் பார்த்த ‘தேவ் டி’ படத்தின் திரைக்கதையை அனுராக்கோடு இணைந்து எழுதியவர். நெட்ப்ளிக்ஸ் ஒரிஜினலுக்காக AK Vs AK படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் பிஸியாக இருந்தவரிடம் பேசினேன்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இது என்ன புது டிரெண்டை உருவாக்கிட்டீங்க. யாராச்சும் நிஜமான சண்டைன்னு நினைச்சுக்கிட்டாங்களா?”

“ஆமா... இந்த ஐடியா லாக்டௌன்ல யோசிச்சதுன்னு சொன்னா நம்பிடுவீங்கதானே? ஆனல், 2013-ல அவினாஷ் சம்பத்ங்கிற ஒருவர் இதைச் சிறுகதையா எழுதியிருந்தார். ‘ரொம்ப மினிமலிஸ்ட்டிக்கா ஒரு சினிமா பண்ணணும். அது சினிமா மாதிரி இல்லாம ரியலா இருக்கணும்’னு யோசிச்சப்போ இது மனசுல வந்துச்சு. அப்பவே அனுராக்கிட்ட இதைச் சொன்னேன். ‘ஏய் விக்ரம், சீக்கிரம் திரைக்கதை எழுது. நாளைக்கே ஷூட் போகலாம்’னார். அப்போ ஷாஹித் கபூரும், அனுராக்கும் நடிக்க இருந்த கதை இது. அப்புறம் ‘சாக்ரெட் கேம்ஸ்’ வெப் சீரிஸ், சினிமா என நாங்க வேற வேலைகளில் பிஸியாகிட்டோம். இப்போ லாக்டௌன்ல உட்கார்ந்து யோசிச்சப்போ, இதைப் பண்ணலாம்னு முடிவெடுத்தோம். அடுத்த வாரமே ஷூட் போனோம்! செம ரகளையான பிளாக் காமெடி த்ரில்லர் படம்!”

இது படைப்புச் சுதந்திரத்துக்கான பெரிய தடைக்கல்.

“ஷாஹித் கபூர் ரோல்ல எப்படி அனில் கபூர்?”

“கதைப்படி ஒரு ஹீரோவால் பாதிக்கப்பட்ட ஒரு இயக்குநர் கேண்டிட்டா அவர் குழந்தையைக் கடத்தி வெச்சுக்கிட்டு... ஒரு கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி, ஹீரோவுக்கே தெரியாமல் அவரோட தேடுதலை ஷூட் செஞ்சு சினிமாவாக்குவார். இந்த முயற்சியில நடக்கிற காமெடி-டிராஜெடி சம்பவங்களின் கோவைதான் படம். குழந்தைக் கடத்தலை நாம ஊக்குவிக்கக் கூடாதுன்னு ஹீரோவோட பொண்ணே இளம் ஹீரோயினா இருந்து, அவங்களைக் கடத்தலாம்னு கதையை மாத்தினோம். சோனம் கபூரும், அவங்க சகோதரர்... என்னோட ‘பாவேஷ் ஜோஷி’ படத்தோட ஹீரோ ஹர்ஷவர்தன் கபூரும் கெஸ்ட் ரோல்ல நடிக்க ஒத்துக்கிட்டாங்க. அனில் கபூர் சார்கிட்ட கதையைச் சொன்னதும், ‘வாங்கடா பசங்களா... பேமிலி படமா ஜமாய்ச்சிடுவோம்!’னு களத்துல குதிச்சிட்டார்! ஜிம்முக்குப் போய், தினமும் ரன்னிங் போய் என ஸ்மார்ட் ஹீரோவா மாறிட்டார். அட்ரீனல் ரைடு உறுதி!”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இது தியேட்டர் ரிலீஸுக்காக எடுக்கப்பட்ட படமா? இந்தியா முழுவதும் பெரும்பாலான தியேட்டர்கள் மூடிக் கிடக்குறப்போ, உங்களால எப்படி அடுத்தடுத்து படங்கள் பண்ண முடியுது?”

“இல்லை... சினிமாவுக்கான மீடியம் இனி மாறும். ஓடிடி பிளாட்பாரம் இனி பெருகும். மக்கள் வீடுகளுக்குள் படம் பார்ப்பாங்க. தியேட்டரும் இருக்கும். ஆனா, மொபைல்ல படம் பார்க்குறவங்க எண்ணிக்கை இனி இரண்டு மடங்காகும். உங்களால கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கிரியேட்டிவிட்டியான சினிமாக்கள், வெப் சீரிஸ்கள் இந்தியாவில் வரும்!”

சினிமாவுக்காக சண்டை செய்வோம் வா!

“நீங்க இப்படிச் சொன்னாலும் இங்கே அதுக்கும் சென்ஸார் வருதே?”

“ரொம்ப வருத்தமான செய்தி. இது படைப்புச் சுதந்திரத்துக்கான பெரிய தடைக்கல். பார்ப்போம். இந்தச் சூழல் மாறும். கிரியேட்டர்கள் இதுக்கு எதிரா ஒண்ணுசேரணும்... சேர்வோம்!”

சினிமாவுக்காக சண்டை செய்வோம் வா!

“பாலிவுட் நெப்போட்டிஸம் பற்றி என்ன நினைக்கிறீங்க?”

“பாலிவுட்ல மட்டும் இல்லை, எல்லா இடங்களிலும் இது இருக்கு. ஆனா, அப்படித் தூக்கிப் பிடிக்கப்படற யாரும் ஜெயிக்க முடியாது. உண்மையான, தகுதியான ஆட்கள்தான் நிலைச்சு நிப்பாங்க. சுஷாந்த் மரணம் துரதிருஷ்டவசமானது. அவருக்கு நிகழ்ந்த சம்பவம் இனி யாருக்கும் நிகழக்கூடாது. இப்போ நெப்போட்டிசம்ல இருந்து பாலிவுட் மீண்டிருச்சுன்னு நினைக்கிறேன். என் ‘பாவேஷ் ஜோஷி’ படத்துல அனில் கபூர் சாரோட பையன் ஹர்ஷவர்தன் கபூரை நடிக்க வைக்கக் கேட்டப்போ அனில் கபூர் சொன்ன முதல் கண்டிஷனே, ‘அவன்மீது என் நிழல்னு எதுவும் விழுந்திடக்கூடாது’ என்பதுதான்.

சினிமாவுக்காக சண்டை செய்வோம் வா!

அவர் பையனை 360 டிகிரி வளைச்சுதான் அந்தப் படத்துல வேலை வாங்கினேன். படம் அவருக்கு பெரிய பிரேக் கொடுக்கலைனாலும், அவருக்கே பர்சனலா நிறைய நம்பிக்கை கொடுத்திருக்கு! ‘அனில் கபூர் பையன்னு வெளில சொன்னே, அடிவிழும்’னு சொல்லித்தான் நடிக்கக் கூட்டிட்டு வந்தேன்!”

சினிமாவுக்காக சண்டை செய்வோம் வா!
‘அனில் கபூர் பையன்னு வெளில சொன்னே, அடிவிழும்’

“தமிழ் சினிமா பார்ப்பீங்களா?”

“தேவ் டி படத்திலிருந்து அனுராக்கோட டிராவல் பண்றேன். அவர் நிறைய தமிழ்ப் படங்களைப் பரிந்துரைப்பார். அவர்கிட்ட டிவிடி வாங்கி நிறைய பார்ப்பேன். ரஜினியும் கமலும் ரொம்பப் பிடிக்கும். வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா ரொம்ப நல்லா பண்றாங்க! தனுஷ், விஜயசேதுபதி நல்லா நடிக்கிறாங்க..!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism