Published:Updated:

`இதைப் பார்க்கையில் மனம் வேதனையடைகிறது!' நடிகைக்கு கண்டனம் தெரிவித்த அக்‌ஷய் குமார்

ரிச்சா சதா, அக்‌ஷய் குமார்

நடிகை ரிச்சா சதாவின் ட்வீட்டிற்கு அக்‌ஷய் குமார் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

`இதைப் பார்க்கையில் மனம் வேதனையடைகிறது!' நடிகைக்கு கண்டனம் தெரிவித்த அக்‌ஷய் குமார்

நடிகை ரிச்சா சதாவின் ட்வீட்டிற்கு அக்‌ஷய் குமார் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ரிச்சா சதா, அக்‌ஷய் குமார்
இந்தியில், கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர், தாஸ் தேவ், பங்கா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிச்சா  சதா. அமேசான் பிரைமில் வெளியான இன்சைட் எட்ஜ் என்ற வெப் சீரிஸிலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.  

இதனிடையே ரிச்சா சதா, இந்திய ராணுவம் குறித்து வெளியிட்ட ட்வீட் ஒன்று இணையத்தில்  வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியது. பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்  தற்போது அக்‌ஷய் குமாரும் ரிச்சா சதாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.   

சமீபத்தில், உபேந்திர திவேதி என்ற இந்திய ராணுவ வீரர்  ட்விட்டரில்  பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானிடமிருந்து முழுமையாகத் திரும்பப் பெற நாங்கள் தயாராக உள்ளோம். அரசின் உத்தரவிற்காகத்தான் காத்திருக்கிறோம்.

ஒருவேளை போர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால் நினைத்துக்கூட பார்க்க  முடியாத அளவிற்கு எங்களது பதில் வேறு மாதிரி இருக்கும் " என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்தப் பதிவை நடிகை ரிச்சா  சதா ரீஷேர் செய்து,  "கல்வான் ஹாய் சொல்கிறது” (Galwaan says hi) என்று பதிவிட்டிருந்தார். இது  இணையத்தில் வைரலாகி,  அவர் இந்திய ராணுவத்தையும் 2020- ல் சீனப் படைகளுடன் போரிட்டு உயிர்த் தியாகம் செய்த வீரர்களையும் அவமதிப்பதாக  நெட்டிசன்கள் பலரும் குற்றம் சாட்டி, தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.  

நடிகர் அக்‌ஷய் குமாரும்  இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ட்வீட் செய்திருக்கிறார். அதில், “ நமது ராணுவப் படையை விமர்சிப்பதைப் பார்த்து மனம் வேதனைப்படுகிறது. அவர்களுக்கு நாம் எப்போதும்  நன்றியற்று இருக்கக்கூடாது'' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.