Published:Updated:

`பிரித்விராஜ் வாங்கிய முதல் கார்' - காதலித்தபோது எடுத்த போட்டோவை பகிர்ந்த சுப்ரியா பிரித்விராஜ்

நடிகர் பிரித்விராஜு முதலில் வாங்கிய காருடன் சுப்ரியா

அது போக்கிரிராஜா திரைப்படத்தின் ஷூட்டிங் சமயம். இந்த போட்டோவில் நீங்கள் பார்க்கும் Z4 காரை பிரித்விராஜ் அப்போதுதான் வாங்கினார் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகர் பிரித்விராஜின் மனைவி சுப்ரியா.

`பிரித்விராஜ் வாங்கிய முதல் கார்' - காதலித்தபோது எடுத்த போட்டோவை பகிர்ந்த சுப்ரியா பிரித்விராஜ்

அது போக்கிரிராஜா திரைப்படத்தின் ஷூட்டிங் சமயம். இந்த போட்டோவில் நீங்கள் பார்க்கும் Z4 காரை பிரித்விராஜ் அப்போதுதான் வாங்கினார் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகர் பிரித்விராஜின் மனைவி சுப்ரியா.

Published:Updated:
நடிகர் பிரித்விராஜு முதலில் வாங்கிய காருடன் சுப்ரியா
நடிகர் பிரித்விராஜிக்கும் சுப்ரியாவுக்கும் 2011-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி பாலக்காட்டில் திருமணம் நடந்தது. கேரளாவைச் சேர்ந்த சுப்பிரியா பிறந்தது வளர்ந்தது எல்லாமே மும்பையில். பிபிசி செய்தியாளராக இருந்தார் சுப்ரியா.

ஒரு நேர்காணலின்போது பிரித்விராஜிக்கும் சுப்ரியாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அலம்கிருதா என்ற மகள் உள்ளார். சுப்ரியா இப்போது சினிமா தயாரிப்பளராக உள்ளார். இந்த நிலையில் பிரித்விராஜ் முதன் முதலாக வாங்கிய கார் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சுப்ரியா. 2009 அல்லது 2010-ம் வருடம் என நினைக்கிறேன். ஆண்டு சரியாக நினைவில்லை. அது போக்கிரிராஜா சினிமா ஷூட்டிங் சமயம். இந்த போட்டோவில் நீங்கள் பார்க்கும் Z4 காரை பிரித்விராஜ் அப்போதுதான் வாங்கினார்.

பிரித்விராஜ்
பிரித்விராஜ்

அப்போது எடுத்த அதிகாரப்பூர்வ போட்டோக்களில் நான் இல்லை. ஆனாலும் நான் அந்த இடத்தில் இருந்தேன்" என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து திருமணத்துக்கு இரண்டு அண்டுகளுக்கு முன்பே பிரித்விராஜும், சுப்பிரியாவும் காதலித்திருக்கிறார்கள் என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கமென்ட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், ஆண்டு நினைவில்லை என சுப்ரியா குறிபிட்டத்தைத் தொடர்ந்து ரசிகர் ஒருவர் கமென்ட்டில் சரியான ஆண்டைக் குறிப்பிட்டு சுப்ரியாவின் பாராட்டை பெற்றுள்ளார்.

முதல் காருடன் பிரித்விராஜும் சுப்ரியாவும்
முதல் காருடன் பிரித்விராஜும் சுப்ரியாவும்

பிரவிம் என்பவர் இந்த பதிவின் கீழ், "அது 2010-ம் ஆண்டுதான். நீங்களும், பிரித்விராஜிம் எர்ணாகுளத்தில் உள்ள பனம்பள்ளி பிரான்ச் கபூர் லைட்ஸ்-க்கு வந்திருந்தீர்கள். பிரித்விராஜின் புதிய பிளாட்டான தேவரா-வீட்டுக்கு தேவையன லைட்டுகள் வாங்க ஜோடியாக வந்திருந்திர்கள். அது எனக்கு இப்போதும் நியாபகம் இருக்கிறது" என குறிப்பிட்டிருந்தார். இந்த கமெண்டுக்கு பதிலளித்த சுப்ரியா, "உங்களுக்கு நல்ல நினைவாற்றல்" எனக்கூறி நன்றி தெரிவித்திருந்தார்.