Published:Updated:

இது நேர்மைக்குக் கிடைத்த வெற்றி - பூச்சிமுருகன்; தீர்ப்பை ஏத்துக்கறோம்! - ஐசரி கணேஷ்

நடிகர் சங்கத் தேர்தல் - விஷால் அணியினர்

''எங்களைப் பொறுத்த வரை ஓட்டு எண்ணிக்கையை சீக்கிரம் நடத்தி, முடிவுகளை அறிவிக்கணும். யார் வந்தாலும் கட்டிடத்தை கட்டிமுடிக்கணும். எதுவாக இருந்தாலும் நீதிமன்றத் தீர்ப்பை ஏத்துக்கறோம்...''

இது நேர்மைக்குக் கிடைத்த வெற்றி - பூச்சிமுருகன்; தீர்ப்பை ஏத்துக்கறோம்! - ஐசரி கணேஷ்

''எங்களைப் பொறுத்த வரை ஓட்டு எண்ணிக்கையை சீக்கிரம் நடத்தி, முடிவுகளை அறிவிக்கணும். யார் வந்தாலும் கட்டிடத்தை கட்டிமுடிக்கணும். எதுவாக இருந்தாலும் நீதிமன்றத் தீர்ப்பை ஏத்துக்கறோம்...''

Published:Updated:
நடிகர் சங்கத் தேர்தல் - விஷால் அணியினர்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இனி விடிவு காலம்தான். தென்னிந்திய நடிகர் சந்ங்கத்தில் 2019ல் நடந்த தேர்தல் செல்லும் என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் (இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு) இன்று தீர்ப்பளித்திருக்கின்றனர்.

இது பற்றி விஷால் அணியின் சார்பாக பூச்சி முருகனிடம் பேசினோம்.

''இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு, நீதிக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி இது. ஏன்னா, ஜனநாயகப்படி நடந்த தேர்தலில் 83 சதவிகித ஓட்டுக்கள் பதிவாகியிருக்கு. எந்த வித சண்டையோ சச்சரவுகளோ, பிரச்னைகளோ இல்லாமல்தான் தேர்தல் நடந்தது. எதிரணியினரும் எங்ககிட்ட கைக்குலுக்கலோடுதான் போனாங்க. இப்படி ஒரு தாமதத்துக்கு காரணம். புகார் அளித்த அந்த ரெண்டு பேருக்கும் பின்புலமா இருந்த அவர் (பெயரை குறிப்பிடவில்லை) தான். வழக்கு போட்ட நடிகர்கள் வெறும் அம்புதான். ஏவிவிட்டவங்க பின்னாடி இருக்காங்க. ஏன்னா, அந்த கேஸ் கொடுத்த நடிகர், நடிகர் சங்கத்துல உதவி வாங்கி வாழ்க்கையை ஓட்டுறவர். அவருக்காக அப்பியர் ஆன வக்கீல்கள்னு பத்து வக்கீல்கள் வந்தாங்க.. ஒவ்வொருத்தரும் ஒருநாளுக்கு ஐந்து லட்சம், பத்து லட்சம்னு பீஸ் வாங்குற பெரிய வக்கீல்களாகத்தான் வந்தாங்க. அப்போ, இவங்க பின்னாடி பூகம்பமா ஒருத்தர் வேலை செய்திருக்கார்னு தெரிஞ்சது. இப்போ கோர்ட் தீர்ப்பு நீதிக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி. வாக்களார்களின் எண்ணத்தை இந்த தீர்ப்பு பிரதிபலிச்சிருக்கு.'' என்கிறார் நடிகர் பூச்சி முருகன்.

பூச்சி முருகன்
பூச்சி முருகன்

என்ன நடந்தது? பின்னோக்கி போனால்.. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்ற நிலையில், அவர்களின் பதவி காலம் 2018-ம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்தது. பின்னர் செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் முறையான வாக்காளர் பட்டியலைத் தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்தை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே 2019-ம் ஆண்டு ஜூன் 23 -ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடந்தாலும், அதற்கான ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படாமல், ஓட்டுப்பெட்டிகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐசரி கணேஷ்
ஐசரி கணேஷ்

நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக் கோரி நடிகர் ஏழுமலை மற்றும் பெஞ்சமின் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரை சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த தனி அதிகாரி தொடர்ந்து கவனிக்கவும் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்குகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (பிப்.,23) காலை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என அறிவித்திருந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவான ஓட்டுகளை 4 வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து நடிகரும் தயாரிப்பாளமான ஐசரி கணேஷிடம் பேசினேன். ''2019ல தேர்தல் நடந்தபோது நடிகர் பெஞ்சமினுக்கு ஓட்டுரிமை இல்லைனு சொன்னதால அவர் நீதிமன்றத்துக்குப் போனார். தனி நீதிபதியும் `அந்த தேர்தல் செல்லாது'னு சொல்லவும், அதை எதிர்த்து கார்த்தி அப்பீல்லுக்குப் போனார். இப்ப அது செல்லும்னு சொல்லியிருக்காங்க. எங்களைப் பொறுத்த வரை ஓட்டு எண்ணிக்கையை சீக்கிரம் நடத்தி, முடிவுகளை அறிவிக்கணும். யார் வந்தாலும் கட்டிடத்தை கட்டிமுடிக்கணும். எதுவாக இருந்தாலும் நீதிமன்றத் தீர்ப்பை ஏத்துக்கறோம்.'' என்கிறார் ஐசரி கணேஷ்.