Published:Updated:

`தங்களிடம் ஒரு கேள்வி' - ஆந்திர அரசிடம் கேள்விகளை முன்வைத்த ராம் கோபால் வர்மா!

ராம் கோபால் வர்மா

மருத்துவம், கல்வி போன்று சினிமாவிற்கும் மானியம் கொடுப்பீர்களா?- ராம் கோபால் வர்மா கண்டனம்

`தங்களிடம் ஒரு கேள்வி' - ஆந்திர அரசிடம் கேள்விகளை முன்வைத்த ராம் கோபால் வர்மா!

மருத்துவம், கல்வி போன்று சினிமாவிற்கும் மானியம் கொடுப்பீர்களா?- ராம் கோபால் வர்மா கண்டனம்

Published:Updated:
ராம் கோபால் வர்மா

சில மாதங்களுக்கு முன்பு, திரையரங்குகளுக்கான புதிய டிக்கெட் கட்டணத்தை நிர்ணையித்து அரசாணை பிறப்பித்திருந்தது ஆந்திர அரசு. ஜிஎஸ்டி இல்லாமல், குளிர்சாதனம் மிகுந்த திரையரங்குகளில் 150 ரூபாயும், மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் 250 ரூபாயும், ஐ-மேக்ஸ் போன்ற பெரிய திரையரங்குகளில் 300 ரூபாய் வரையும் கட்டணத்தை நிர்ணயித்தது. மேலும்,பராமரிப்பு கட்டணமாக ரூபாய் ரூ.3 முதல் ரூ.5 வரை வசூல் செய்யலாம் என்றும் நிர்ணயித்தது. மேலும், திரையரங்குகளில் குறிப்பிட்ட காட்சிகள் மட்டுமே திரையிடப் படவேண்டும் எனவும், திரையரங்குகளின் டிக்கெட்களை பதிவு செய்வதற்கு அரசின் இணையதள வசதி ஏற்பாடு செய்யப்படும் எனவும் ஆந்திர அரசு அறிவித்திருந்தது. இதுபோன்ற அறிவிப்புக்குப் பின்பு, ஆந்திராவில் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டன. இதற்கு தெலுங்கு திரையுல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ராம் கோபால் வர்மா
ராம் கோபால் வர்மா

மேலும் இதற்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில்,அமைச்சர் பெர்ணி வெங்கட்ராமயாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், "அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது, அரசு அதன் விலையை சமநிலைக்குக் கொண்டு கீழே, மேலே என்று விலையை நிர்ணயிக்கலாம். ஆனால் இது திரையரங்குகளுக்கு எப்படி பொருந்தும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்

மேலும், "பொருளாதார விதியின் படி, உணவு தானியங்களின் விலையை வழுகட்டாயமாக குறைப்பது, பொருட்களின் தரத்தை குறைக்கும். இதே விதி தான் திரைப்பட தயாரிப்பிற்கும் பொருந்தும் எனவும், ஏழைகளுக்கு சினிமா வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் தருணத்தில், கல்வி மற்றும் மருத்துவம் போன்ற சேவைகளுக்கு மானியம் தருவது போல், ஏன் சினிமாவிற்கு மானியம் தருவதில்லை? அரிசி, சர்க்கரை ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட ரேஷன் கடைகள் போல் ரேஷன் திரையரங்குகள் உருவாக்கபடுமா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.